லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே.. அச்சு, அசலாக அவரைப் போலவே.. கிரேட்டா தன்பர்க்குக்கு சிலை வடித்த பிரிட்டன் பல்கலைக்கழகம்!

Google Oneindia Tamil News

லண்டன்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்குக்கு பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகம் சிலை வடித்து கவுரவித்துள்ளது.

உலக அளவிலான பிரச்னைகளைப் பற்றி குரல் எழுப்பும், பெருமைக்குரிய கிரேட்டா தன்பர்க் அனைவருக்கும் முன்மாதிரி என்று பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.

மக்கள் மனதில் பதிந்த பெயர்

மக்கள் மனதில் பதிந்த பெயர்

கிரேட்டா தன்பர்க்... உலக மக்கள் மனதில் பதிந்த ஒரு பெயர். ஏன் சமீபத்தில் இந்திய மக்களே நன்கு அறிந்து கொண்ட பெயர். பள்ளிக்கு செல்ல வேண்டிய இளம் வயதிலேயே பொறுப்புணர்ந்து பருவநிலை மாற்றத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்தான் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இந்த கிரேட்டா தன்பர்க். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் அணி திரள வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தியவர்.

டிரம்பை அலற விட்டவர்

டிரம்பை அலற விட்டவர்

இவ்வளவு ஏன்? ''உங்களது வெற்று வார்த்தைகளால், எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை ஐ.நா.வில் வைத்து கேள்வி கேட்டவர் கிரேட்டா தன்பர்க்.

இந்தியாவுக்கும் தெரிந்த முகம்

இந்தியாவுக்கும் தெரிந்த முகம்

கிரேட்டா தன்பர்க் இவ்வாறு வீதிக்கு, வீதிக்கு உரக்க சப்தமிட தொடங்கிய பிறகுதான் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், மக்களும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு குரல் எழுப்பியபோது, இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக மாறினார் கிரேட்டா தன்பர்க்.

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சிலை

பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் சிலை

இவ்வாறு பெருமை பெற்று விளங்கிய கிரேட்டா தன்பர்க்கு சிலை வைத்து கவுரவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள வின்செஸ்டர் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 23,700 செலவில் கிரேட்டா தன்பர்கின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க மாணவர்கள் அளித்த நிதியிலேயே இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முன்மாதிரி

மாணவர்களுக்கு முன்மாதிரி

இது தொடர்பாக வின்செஸ்டர் பல்கலைக்கழக வேந்தர் மெகன் பால் கூறுகையில், 'உலக அளவிலான பிரச்னைகளைப் பற்றி குரல் எழுப்பும், பெருமைக்குரிய அனைவருக்கும் கிரேட்டா தன்பர்க் அனைவருக்கும் முன்மாதிரி. கிரேட்டாவைபோல் மற்ற மாணவர்களும் சர்ச்சைக்குரிய பிரச்னைகளைப் பற்றிபேச முன்வரவேண்டும்' என்று கூறினார்.

English summary
University of Britain pays tribute to Swedish young environmental activist Greta Dunberg
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X