ஆளப் போறான் இந்தியன்! பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக்! சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடி சொத்துகளா?

Subscribe to Oneindia Tamil

லண்டன் : சூரியன் மறையாத நாடு என்ற பெருமை கொண்ட இங்கிலாந்தின் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. அந்த சாதனையை ரிஷி சுனக் படைத்திருக்கும் நிலையில் அவரது ஊதியம் எவ்வளவு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெறும் 42 வயதில் பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார் ரிஷி சுனக். அவருக்கு லண்டன் அரண்மனையில் மன்னர் 3ஆம் சார்லஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதன் மூலம் பல வரலாறுகளை ரிஷி சுனக் படைத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

முதல்முறை பிரதமர்

முதல்முறை பிரதமர்

சுமார் இரண்டு நூற்றாண்டுகள் இந்தியாவையே ஆண்ட ஒரு தேசத்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்பது இதுதான் முதல் தடவை. மேலும் இந்து மதத்தை பின்பற்றும் ஒருவர் இங்கிலாந்தின் நாடாளும் பிரதமராக பதவி ஏற்பதும் இதுவே முதல் முறை. முதலில் எம்பியாகி பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமராகி பதவி ஏற்ற போது பகவத் கீதையின் மீது அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மன்னரை விட சொத்து அதிகம்

மன்னரை விட சொத்து அதிகம்

இங்கிலாந்தில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி எடுத்துக் கொண்டதும் இப்போதுதான். பிரதமர் மட்டுமல்ல அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் கூட இதுவரை பிரதமராக இருந்தவர்கள் லண்டன் மன்னரை விட சொத்து எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பார். ஆனால் தற்போது பிரதமராக பதவி ஏற்றி இருக்கும் ரிஷி சுனக் மன்னரை விட மன்னர் சார்லஸ்ன் சொத்து மதிப்பை விட இரண்டு மதிப்பு அதிகம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஊதியம் எவ்வளவு

ஊதியம் எவ்வளவு

சரி பிரதமராக பதவியேற்றிருக்கும் அவருக்கு ஊதியம் எவ்வளவு என பார்க்கலாம். தற்போது பிரதமராக பதவி ஏற்றி இருக்கும் அவருக்கு சராசரியாக வருடத்திற்கு 164,080 இங்கிலாந்து பவுண்டு ஊதியமாக வழங்கப்படும் பிரதமராக பணியாற்றுவதற்கு 79 ஆயிரத்து 936 பவுண்டுகளும், எம்பியாக பணியாற்றுவதற்கு 84 ஆயிரத்து 144 பவுண்டுகளும் ஊதியம் வழங்கப்படும். மொத்தமாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 80 பவுண்டுகள் ரிஷி சுனத்திற்கு ஊதியமாக கிடைக்கும். இது இந்திய மதிப்பில் 1 கோடியே 54 லட்சத்து 98 ஆயிரத்து 808 ரூபாய் ஆகும்.

 இவ்வளவு சொத்துக்களா?

இவ்வளவு சொத்துக்களா?

சொத்து மதிப்பு என பார்க்கும் போது ரிஷி சுனக் மட்டுமல்ல அவரது மனைவியும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். அவரது தந்தை வேறு யாரும் அல்ல இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள்தான் ரிஷி சூனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி. இவர்களது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 730 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 22 வது பணக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்ன் சொத்து மதிப்பே 300ல் இருந்து 350 மில்லியன் பவுண்டுகளுக்குள் தான் இருக்கும் நிலையில் அவர்களை விட இரு மடங்கு சொத்து மதிப்பை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+