படையெடுக்கும் "அகதிகள்.." வார்த்தையை விட்ட தமிழ் வம்சாவளி பிரிட்டன் அமைச்சர்! அவரே இப்படி பேசலாமா
லண்டன்: பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுயெல்லா பிரேவர்மேன் அகதிகள் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பிரிட்டன் நாட்டில் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரமதராகப் பொறுப்பேற்று உள்ளார். லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார்.
பிரிட்டன் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், அதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்கான நடவடிக்கையை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
தமிழ் பெண்ணை அமைச்சராக்கிய விவகாரம்.. சுற்றி நின்ற எதிர்க்கட்சிகள்! தனி ஆளாக பதிலடி தந்த ரிஷி சுனக்

சுயெல்லா பிரேவர்மேன்
பதவிக்கு வந்த உடன் டாப் அமைச்சர்களை நீக்கிய ரிஷி சுனக், முக்கியமான துறைகளில் ஒன்றான உள் துறைக்கு சுயெல்லா பிரேவர்மேன் என்பவரை அமைச்சராக நியமித்தார். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் லிஸ் டிரஸ் பிரதமராக இருந்து உள்ளார். இருப்பினும், அவர் அரசு கோப்புகளைத் தனிப்பட்ட இமெயில் மூலம் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்தது. இது பாதுகாப்பு விதிமீறல் கடும் விமர்சனம் எழுந்தது.

மீண்டும் அமைச்சர்
இதையடுத்து தனது தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சுயெல்லா பிரேவர்மேன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே சில வார இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சராகியுள்ளார். மோசமான நிலையில் உள்ள பிரிட்டன் பொருளாதாரத்தைக் காக்க இவரது நடவடிக்கைகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சுயெல்லா பிரேவர்மேன் அகதிகள் குறித்து கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

சொன்ன ஒற்றை வார்த்தை
பிரிட்டன் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், வாழ வழியின்றி புகலிடம் கோரி அகதிகளாக வருபவர்கள் படையெடுப்பதாகக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், பிரிட்டனில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துவிட்டதாகவும் இதை கண்காணிக்கும் அமைப்புகளும் செயலிழந்துவிட்டதாகக் கூறி இருந்தார். இங்கிலீஷ் கால்வாய் வரும் அனைத்து படகுகளுக்கும் புகலிடம் தர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அகதிகள் படையெடுப்பு
தெற்கு இங்கிலாந்தில் உள்ள அகதிகள் மையத் தாக்குதல் தொடர்பாகவே அவர் இப்படிக் கூறி இருந்தார். மேலும் அவர், "இந்த படையெடுப்பைத் தடுப்பதில் எந்தக் கட்சி தீவிரமாக உள்ளது என்பதைப் பிரிட்டிஷ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு மட்டும் சுமார் 40,000 பேர் பிரிட்டன் வந்துள்ளனர். அவர்களில் பலர் முறைகேடாகக் குடியேறி உள்ளனர். அவர்களில் சிலர் உண்மையாகவே குற்றவாளிகள் தான். எனவே நாட்டிற்கு வரும் அனைவரும் அகதிகள் எனக் கூறிவிட முடியாது.

எதிர்ப்பு
இது தான் உண்மை என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.. எதிர்க்கட்சி மட்டுமே பொய்யான கருத்துகளைக் கூறி அரசியல் செய்கிறார்கள்" என்று கூறினார். இதற்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அமைச்சர் பிரேவர்மேன் முறைகேடாக நடக்கும் குடியேற்றத்தையே படையெடுப்பு எனக் கூறியதாக அக்கட்சியின் இணை அமைச்சர் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்து உள்ளார். இது எவ்வளவு தீவிரமான பிரச்சினை என்பதை உணர்த்தவே அமைச்சர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் சமாளித்தார்.

உறுதி
இதுமட்டுமின்றி அடைக்கலாம் கோரி வந்தவர்களுக்கான நிதியை பிரேவர்மேன் விடுவிக்கவில்லை என்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை மீறிச் செயல்படுவதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "நான் சட்ட நிபுணர்களைப் புறக்கணிக்கவில்லை. நான் சொல்வது ஒன்று தான். அவர்கள் யாரென்று உறுதியாகத் தெரியாமல், பிரிட்டனில் அவர்களை அனுமதிக்க முடியாது. எனது இந்த நிலைப்பாட்டை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை" என்றார்.

எச்சரிக்கை
நிதிகளை விடுவிக்க மறுத்தது மட்டுமின்றி இப்போது அங்குள்ள அகதிகள் சட்ட விரோதமாகவும் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அகதிகளை பொதுவாக வரவேற்காது என்ற போதிலும், பிரேவர்மேனின் படையெடுப்பு போன்ற கருத்துகள் வன்முறையை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.