ஆசை, ஆசையாய் ஆர்டர் செய்த பீட்சாவில் கிடந்த இரும்பு நட்டுகள், போல்ட்டுகள்.. பெண் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் ஆசை, ஆசையாய் சாப்பிட வாங்கிய பீட்சாவில் இரும்பு போல்ட்டுகள், நட்டுகள் இருந்ததால் அதனை ஆர்டர் செய்த பெண் அதிர்ச்சி அடைந்தார். பீட்ஸா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

இங்கிலாந்து லங்காஷயர் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெம்மா பார்டன். பசி வயிற்றை கிள்ளியதால் பிரபல பீட்சா நிறுவனமான டொமினோசில் பீட்சா ஆர்டர் செய்தார்.

பீட்சாவில் போல்ட்கள்

பீட்சாவில் போல்ட்கள்

ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் பீட்சா அவரது வீடு தேடி வந்தது. 'இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரி' என்பதுபோல் பீட்சா வந்தவுடன் ஆசை, ஆசையாக அதனை சாப்பிட ஆரம்பித்தார். அப்போது பீட்சாவில் இரும்பு நட்டுகள், போல்ட்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெம்மா பார்டன் உடனடியாக பீட்ஸா ஆர்டர் செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

 நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

இதனை தொடர்ந்து இதற்காக மன்னிப்பு கேட்ட டொமினோஸ் நிறுவனம் ஜெம்மா பார்டன் அந்த பீட்சாவுக்கு செலுத்திய பணத்தை அவரிடமே திருப்பி கொடுத்தது. பீட்சாவில் இரும்பு நட்டுகள், போல்ட்டுகள் இருப்பது குறித்து ஜெம்மா பார்டன் முகநூலில் பதிவிட்டார். '' இரவில் எனது டோமினோஸ் பீட்ஸா ஆர்டரில் நான் கண்டவற்றால் முற்றிலும் திகிலடைந்தேன். பீட்சாவில் சுடப்பட்ட NUT மற்றும் BOLT இருக்கிறது. நான் இதில் பாதியை சாப்பிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

சோதனை செய்கிறார்களா?

சோதனை செய்கிறார்களா?

தயவுசெய்து தயவுசெய்து சாப்பிடுவதற்கு முன் உங்கள் பீட்சாக்களை இருமுறை சரிபார்க்கவும். அதுவும் ஃப்ளீட்வுட் சாலை வடக்கில் உள்ள தோர்ன்டன்-க்ளீவ்லீஸ் கிளையில் டொமினோசில் இருந்து பீட்சா ஆர்டர் செய்யும் போது கவனமாக இருங்கள்'. . டொமினோஸ் தரச் சோதனை செய்கிறார்களா? என்று ஜெம்மா பார்டன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து டொமினோஸ் நிறுவனமும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது.

மன்னிப்பு கேட்டது

மன்னிப்பு கேட்டது

''டோமினோவில் நாங்கள் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தெரியாமல் நடந்த இந்த தவறு மிகவும் அரிதானது ஜெம்மா பார்டனின் புகாரைப் பெற்றவுடன், அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டோம். மேலும் இது தொடர்பாக எங்கள் ஸ்டோர் ஊழியர்களிடம் விசாரித்து உடனடியாக ஜெம்மா பார்டனுக்கு முழு பணத்தைத் திரும்ப வழங்கினோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சரியான செயல்முறையை எங்கள் ஸ்டோர் குழுவுக்கு நினைவூட்டியுள்ளோம்'' என்று டொமினோஸ் நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+