நஞ்சை விதைத்த ஆபாச படம்.. அலறிய 7 வயது சிறுமி.. பலாத்காரம் செய்த 10 வயது சிறுவன்.. போக்சோவில் கைது
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

பாலியல்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "கான்பூரில் இந்த சிறுமியின் குடும்பமும், சிறுவனின் குடும்பமும் வசித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் சிறுமியின் பெற்றோர்கள் வெளியில் சென்றுள்ளனர். சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த சிறுவன், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து வீடு திரும்பிய பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதை பார்த்து விசாரித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் எங்களிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், தனது உறவினர் ஒருவரின் செல்போனில் ஆபாச படம் பார்த்த பின்னர்தான் இதுபோன்று நடந்துகொண்டதாகவும் சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். இதனையடுத்து அவன் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வலியுறுத்தல்
நீதிமன்ற உத்தரவையடுத்து சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. NCRB வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் இம்மாநிலத்தில் 6,898 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றங்களை குறைக்க பாலியல் கல்வியையும், பாலியல் சமத்துவத்தையும் சிறு வயதிலிருந்தே கற்பிக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு இயங்கி வருகிறது. கடந்த 2020ஐ காட்டிலும் 2021ம் ஆண்டில் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக NCRB தெரிவித்திருக்கிறது. ஆனால் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications