இப்படி கூட நடக்குமா? ரயிலில் ஜன்னல் ஓரம் இருந்த பயணி.. கழுத்தில் பாய்ந்த இரும்பு ராட்..திக்! திக்!
லக்னோ: டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வந்துகொண்டிருந்த நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பயணியின் மீது தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி புகுந்த சம்பவம் பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் நிறைந்த இந்தியாவில் மக்களின் பயணத்தேவையை பூர்த்தி செய்வதில் ரயில்வேக்கு பெரிய பங்கு உள்ளது. பாதுகாப்பானது மட்டும் இன்றி சரியான நேரத்தில் சென்றுவிடும் என்பதால் பயணிகள் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
டிக்கெட்டுகள் குறைவு என்பதால் சாதாராண ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ரயிலில் அதிகம் பயணிப்பதை பார்க்க முடியும்.

ரயில் பயணத்தில் விபத்து அபாயம் குறைவு
நீண்ட தூர பயணங்களுக்காக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரை பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பிய படியே இருக்கும். சாலை வழியாக செல்லும் போது டிராபிக் அதிகமாக இருக்கும். ஆனால், ரயிலில் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது. இதனால் ரயில் பயணத்தை பலரும் விரும்புகின்றனர். அதேபோல், கார்கள் மற்றும் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என சாலை வழி பயணத்தோடு ஒப்பிடும் போது ரயில் பயணத்தில் விபத்து அபாயம் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

நெஞ்சை உறைய வைக்கும் வகையில்..
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு விபத்து ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. டெல்லியில் இருந்து கான்பூருக்கு செல்லும் நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைபெற்ற ஒரு விபத்துதான் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹரிகேஷ் குமார் என்ற பயணி பயணம் செய்து இருக்கிறார்.

பாய்ந்து வந்த இரும்பு கம்பி
ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி பயணத்தை ரசித்துகொண்டே சென்ற இவருக்கு அடுத்த சில நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் உண்மையில் அறிந்து இருக்கவில்லை தான். காலை 8.45 மணியளவில் பிரக்யாராஜ் அருகே ரயில் சீறிப்பாய்து சென்று கொண்டிருந்தது. தன்வார் மற்றும் சோம்னா ரயில் நிலயங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துகொண்டு இரும்பு கம்பி ஒன்று ரயிலுக்குள் பாய்ந்துள்ளது.

கழுத்தில் பாய்ந்தது
இதை சற்றும் எதிர்பாராத ஹரிகேஷ் குமார் துபே, சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் பாய்ந்தது. இந்த பயங்கர விபத்தில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த நபர் குறித்து ரயில் பயணிகள் அளித்த தகவலின் படி அடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தண்டவாளத்தில் கிடந்த கம்பி
ரயில் தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. தண்டவாளத்தில் இரும்பு கம்பி கிடந்து இருக்கலாம் என்றும் ரயிலின் சக்கரம் ஏறியதில் கம்பி உள்ளே பாய்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி எல்லாம் கூட விபத்து நடக்குமா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு பயணி ஒருவரின் உயிரை பறித்து இருக்கிறது இந்த விபத்து.

அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது
பாதுகாப்பான பயணங்களில் ஒன்றாக அறியப்படும் ரயில் பயணத்தில் இதுபோன்று விபத்து நடைபெற்று பயணியின் உயிரை பறித்து இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கருத்தாக அமைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications