ஷாக்! பொது நிகழ்ச்சியில் அவலம்.. பெண் எம்எல்ஏவின் தோளை பிடித்து.. அநாகரீமாக நடந்து கொண்ட பாஜக எம்பி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் எம்.எல்.ஏ ஒருவரிடம் பாஜக எம்.பி முகம் சுளிக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் வைத்தே நடந்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அம்மாநிலத்தில் கடந்த 25 ஆம் தேதி தீன் தயாள் உபாத்யாவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏக்க்ள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். அப்போது அலிகார் தொகுதி பாஜக எம்.பி சதீஷ் கவுதம் தனது அருகே இருந்த பெண் எம்.எல்.ஏ முக்த ராஜாவின் தோளை பிடித்து நெருக்கம் காட்டியது முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

எம்.எல்.ஏவின் செயலால் அந்த பெண் எம்.எல்.ஏவும் கடுப்படைந்தது அவரது முக பாவனையில் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெண் எம்.எல்.ஏவிடம் சிரித்தபடியே எதையோ கூறும் எம்.பி, தொடர்ந்து தோளில் கை வைக்கிறார். எம்.பியின் செயலால் அதிர்ச்சி அடைந்த பெண் எம்.எல்.ஏ அசவுகரியமாக உணர்வதோடு, உடனடியாக அவரை தடுத்து நிறுத்துகிறார்.
சிறிது நேரத்தில் தனது இருக்கையில் இருந்தே அந்த பெண் எம்.எல்.ஏ எழுந்து வேறு இடத்திற்கு சென்று விடுகிறார். இது தொடர்பான விடீயோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுத்து, பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.
எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக கூறுகையில், நிகழ்ச்சியில் வைத்து எம்.எல்.ஏவுக்கே துன்புறுத்தல் நடக்கும் போது, சாதாரண பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள். எம்.பியின் செயல் சமூகத்திற்கு அவமானகரமானது" என்று கூறியுள்ளது. தெலுங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த ஒய் சதீஷ் ரெட்டி, இந்த விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " மோடி ஆட்சியில் பெண் எம்.எல்.ஏவுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும்? அலிகார் பாஜக எம்.பி சதீஷ் கவுதம் பாஜக பெண் எம்.எல்.ஏவை துன்புறுத்துகிறார். அவர் அசவுகரியமாக உணர்வது தெளிவாக தெரிகிறது. அங்கு என்ன நடந்தது என யாரவாது விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் முன்னிலையிலேயே பாஜக எம்.பி இப்படி நடந்து கொண்டது அநாகரிக செயல் என்றும் பாஜக உடனடியாக எம்.பி சதீஷ் கவுதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில், பாஜக இது தொடர்பாக விளக்கம் எதையும் அளிக்கவில்லை.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications