உடல் முழுவதும் அடர்த்தியான முடியுடன் பிறந்த விசித்திரக் குழந்தை.. டாக்டர்கள் 'ஷாக்'
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவருக்கு உடல் முழுவதும் அடர்த்தியான முடிகளுடன் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உடலில் 60 சதவீத அளவுக்கு அதாவது முதுகு முழுவதும் முடியுடனும், முன்பகுதியில் சிறிது முடியுடன் அந்தக் குழந்தை காணப்படுகிறது. தற்போது அந்தக் குழந்தையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இது, ஒரு அரிய வகை குறைபாடு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிய குழந்தைகள்
என்னதான் மருத்துவம் உச்சபட்ச வளர்ச்சியை அடைந்திருந்தாலும் அதற்கே சவால் விடும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கவே செய்கின்றன. அதில் ஒன்றுதான், விசித்திர தோற்றத்துடன் பிறக்கும் குழந்தைகள். உலக அளவில் 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது இப்படி சில விசித்திர குழந்தைகள் பிறக்கத்தான் செய்கின்றன. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, கொம்புகளுடன் பிறந்த குழந்தை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை போன்ற செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு ஏன்.. சமீபத்தில் வாலுடன் ஒரு குழந்தை பிறந்தது. எனினும், இப்படி குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என இதுவரை மருத்துவ உலகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியொரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது.

உடல் முழுக்க அடர் முடி
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று முன்தினம் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையை கண்ட மருத்துவர்களும், செவிலியர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஏனெனில், அந்தக் குழந்தைக்கு உடலில் 60 சதவீதம் அளவுக்கு அடர்ந்த முடி இருந்துள்ளது. அதாவது, முதுகு பகுதி முழுவதும், முன்புறம் சிறிதளவு வரை அந்த முடி படர்ந்திருக்கிறது.

அரிய வகை குறைபாடு
முடி மட்டுமல்லாமல் அந்தப் பகுதி முழுவதும் கறுப்பு நிறப் படலமும் இருக்கிறது. அந்தப் படலத்தின் மீது தான் இந்த அடர் முடி வளர்ந்திருக்கிறது. இதையடுத்து, அந்தக் குழந்தையை தோல் நோய் மருத்துவர் இக்ராம் ஹுசேன் பரிசோதனை செய்தார். அப்போது இது ஒரு அரிய வகை குறைபாடு என்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் இக்ராம் ஹுசேன் கூறுகையில், "தோலுக்கு நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகளில் ஏற்படும் அரிய வகை குறைபாட்டால் அந்தக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில் "Giant congenitial melanocytic nevus" எனக் கூறுவார்கள்.

"புற்றுநோயாக மாறலாம்"
இது மிகவும் அரிய வகை குறைபாடு. உலக அளவில் பிறக்கும் 50,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. உடலில் இருக்கும் இந்தக் கரும்படலம் வெறும் நிறம் மட்டுமல்ல. அது ஒரு 'பேட்ச்' (patch). அதாவது அது ஒரு கடினமான தோலை போன்று இருக்கும். இது புற்றுநோய் இல்லை என்ற போதிலும், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு நாளடைவில் இது தோல் புற்றுநோயாக மாற சிறிதளவு வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த 'பேட்ச்' முதுகெலும்பை அழுத்துவதால் மூளையும் அழுத்தத்திற்கு உள்ளாகும. இதனால் தலைவலி, வாந்தி, நடப்பதில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்" என அவர் கூறினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications