உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்று பாஜக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசத்தில் தேர்தல்
அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

அயோத்தியில் போட்டி?
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக தீவிரமான பணியில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அயோத்தி தொகுதியில் போட்டியிட செய்ய மூத்த தலைவர்கள் பரிசீலனை செய்ததாக தெரிகிறது. அயோத்தி தொகுதியில் யோகி ஆதித்யநாத் நிறுத்தப்படலாம் என கட்சிக்குள் விவாதிக்கப்பட்டதாக கட்சிவட்டாரங்கள் கூறுகின்றன.

இந்துக்கள் வாக்குகள்
அயோத்தியில் நின்றால் இந்துக்கள் வாக்குகளை எளிதில் அறுவடை செய்யலாம் என்பதால் கட்சியின் முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தை அங்கு போட்டியிட விரும்புவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கட்சியின் மேலிடம்தான் யார்? யார்? எங்கு போட்டியிடலாம்? என்று இறுதி முடிவு செய்யும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ''கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். மீண்டும் ஆட்சிக்கு வருவதே நமது முழுமையான இலக்கு '' என்று யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கூறி இருந்தார்.

விரைவில் இறுதி முடிவு
பிப்ரவரி 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசத்தில் முதல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதில் போட்டியிடும் இறுதி செய்ய, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் மத்திய தேர்தல் குழு விரைவில் கூட உள்ளது. அப்போது யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதி இறுதி செய்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications