காதலித்து திருமணம் செய்தேன்.. அப்பா மிரட்டுகிறார்.. வீடியோவில் கதறிய பாஜக எம்எல்ஏ மகள்!
தலித் இளைஞனை பாஜக எம்எல்ஏ மகள் திருமணம் செய்து கொண்டார்
லக்னோ: பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகள், தான் காதலித்த தலித் இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள், சாக்ஷி. 23 வயசாகிறது. இவர் காலேஜ் படிக்கும்போதிருந்தே அஜிதேஷ் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.
ஆனால் அஜிதேஷ் குமார் தலித் என சொல்லப்படுகிறது. இதனால் எப்படியும் வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்து கொள்ள மாட்டார்கள் என்பதால் கோயில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர். பிறகு முறைப்படி திருமணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் பெற்று விட்டனர்.

இந்நிலையில், தன்னுடைய தந்தை கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போதிய பாதுகாப்பு தங்களுக்கு வழங்கக்கோரியும் சோஷியல் மீடியாவில் எல்லாரிடமும் உதவி கேட்டுள்ளார் மணப்பெண் சாக்ஷி. இது சம்பந்தமான வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அதில், "என்னுடைய அப்பா, அண்ணன், மேலும் சில குண்டர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்களுக்கு ரேபரேலி போலீஸார்தான் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒருவேளை நாங்கள் ரெண்டு பேரும் கொல்லப்பட்டால் பரேலி மாவட்டத்தை சேர்ந்த எம்பி., எம்எல்ஏக்கள் என்னுடைய அப்பாவுக்கு யாரும் உதவக்கூடாது" என்று கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை எம்எல்ஏவான பெண்ணின் அப்பாவும் பார்த்திருக்கிறார். "நான் காதலுக்கு எதிரானவன் கிடையாது, அதனால் மகளை விருப்பமானவனுடன் சேர்த்து வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த பையனுக்கு என் மகளை விட வயசு ரொம்ப அதிகம். அவனுக்கு வேலையும் எதுவுல் இல்லை" என்று வருத்தமாக சொல்கிறார். பாதுகாப்பு தரலாம் என்றால், ரெண்டு பேரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லும் போலீசார், தம்பதிகளை தேடி வருகிறார்களாம்.
பொதுவாக உத்திரபிரதேசத்தில்தான் சாதீய கொடுமைகள் அதிகம், இதன்மூலம் நடக்கும் படுகொலைகளும் அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு பாஜக எம்எல்ஏ மகள், தலித் இளைஞருடன் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications