ரூ.3,405 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்! வேற லெவலில் வளரும் உத்தரப் பிரதேசம்! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரூ.3,405 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் விரைவில் உத்தரப் பிரதேசம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ரூ.3,405 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இதில் ரூ.2,700 கோடி மதிப்பிலான 57 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதேபோல மாநகரின் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய அதிகாரிகள்,
அதாவது அனைத்து நகரங்களிலும் சர்வதேச தரத்தில் சாலைகள் அமைக்க, முதல்வர் பசுமை சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காகதான் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய ஏற்கெனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 17 மாநகராட்சிகளில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10-45 கி.மீ வரையிலான அனைத்து சாலைகளும் அதிநவீன சாலைகளாக மேம்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, 200 நகராட்சிகள் மற்றும் 545 நகர பஞ்சாயத்துகளின் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்த பணிகளை கண்காணிக்கும் பணி மாநில அரசு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்படும்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள கலாச்சார, புராண, மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்கும் 'வந்தன் யோஜனா' திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் உத்தரப் பிரதேசம் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்" என்று கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications