"பலாத்காரம்".. 8 வயசுதான்.. கதறிய சிறுமி.. பாஜக எம்எல்ஏக்கு எதிராக பறந்த பிடி வாரண்ட்.. கொடுமை
லக்னோ: 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் உத்தரப் பிரதேசத்தின் 'துத்தி' சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் 'ராம்துலரை' கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி மையர்பூர் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது மையர்பூர் தலைவியின் கணவர் ராம்துலர் தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்பதுதான் அந்த வழக்கு. இது தொடர்பான புகாரில், "எனது தங்கைக்கு எட்டு வயது நிரம்பியுள்ளது. அவள் எங்களது வீட்டின் அருகில்தான் விளையாடிக்கொண்டிருப்பார். ஆனால், சில நேரங்களில் காணாமல் போய்விடுவார்.
அவளை தேடுவதே எங்களுக்கு எப்போதும் வேலையாக இருக்கும். சிறிது நேரம் கழித்து அவளே வீடு வந்து சேர்ந்து விடுவாள். ஆனால் இப்படி வரும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படுவாள். ஆரம்பத்தில் இது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இன்று அவள் வீட்டிற்கு அழுதபடியே வந்துக்கொண்டிருந்தாள். அவளை அழைத்து விசாரித்தபோது தன்னிடம் ராம்துலர் தவறாக நடந்துக்கொண்டதாக கூறினார்.

மிரட்டல்
மட்டுமல்லாது இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதேபோல பலமுறை எனது தங்கை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனவே அவளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் அண்ணனர் புகாரில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். சிறுமி பாதிக்கப்பட்டதற்கு சான்றாக ஆதாரங்களை தேடி உறுதி செய்தனர். ஆனால் இதற்குள் காலம் கடந்துவிட்டது. சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணைக்கு இடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

எம்எல்ஏ
அப்போது ஊர் தலைவியின் கணவராக இருந்த ராம்துலர் தற்போது துத்தி தொகுதியின் 'பாஜக' எம்எல்ஏவாக மாறிவிட்டார். இதனால் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இருந்தாலும் அவரை கைது செய்ய முடியாமல் காவல்துறையினர் தவித்து வந்தனர். இந்த வழக்கு சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு குறித்து நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ராம்துலருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதால் இதில் ஆஜராக முடிவில்லை என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

கைது வாரண்ட்
இந்த காரணத்தை முதல் இரண்டு முறை பொறுத்து பார்த்த நீதிமன்றம் மூன்றாவது முறை பொறுத்துக்கொள்ளவில்லை. எனவே கூடுதல் அமர்வு நீதிபதி ராகுல் மிஸ்ரா, பாஜக எமல்ஏ ராம்துலருக்கு எதிராக பிடிவாரண்டை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில்
தேசிய அளவில் ராஜஸ்தானுக்கு அடுத்து பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் உத்தரப் பிரதேசம் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 86 பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications