"கருகிய ரொட்டியை சாப்பிட சொல்லி கொடுமை".. மனைவிக்கு எதிராக பாஜக பிரமுகர் மகன் வீடியோ - தற்கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ''சாப்பிடுவதற்கு கருகிய ரொட்டியை தருகிறாள். அதுபற்றி கேள்வி கேட்டால் சண்டையிட்டு அடிக்கிறாள். என்னுடைய சொத்துகளை அவளது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று மொத்த குடும்பமும் மிரட்டுகிறாள். இதனால் நான் என் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்'' என வீடியோ பதிவு செய்துவிட்டு பாஜக பிரமுகரின் மகன் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

fed-me-burnt-roti-bjp-leadess-son-dies-by-suicide-after-recorded-video-against-his-wife-and-her-fa

உத்தர பிரதேசத்தின் மீரடடை சேர்ந்தவர் ராஜீவ் குப்தா. பாஜக பிரமுகரான இவர் கங்கார்கேரா மண்டல் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன் பெயர் பிரவால் குப்தா (வயது 26). திருமணமாகிவிட்டது. இவரது மனைவி பெயர் சினேகா குப்தா. இந்த தம்பதிக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது.

பிரவால் குப்தா - சினேகா குப்தா ஆகியோரின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி நடந்தது. கடந்த 2ம் தேதி அவர்கள் முதலாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாட வேண்டும். ஆனால் தம்பதிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

கடந்த அக்டோபர் 31ம் தேதி தான் இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். விட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டது. இனி பிரச்சனை வராது என்று நினைத்த நிலையில் மறுநாளே சோக சம்பவம் நடந்து விட்டது.

பிரவால் குப்தா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். நவம்பர் 2ம் தேதி திருமண நாள் கொண்டாட இருந்த நிலையில் ஒருநாள் முன்பாக நவம்பர் 1ம் தேதியே வீட்டை விட்டு வெளியே சென்று விஷம் குடித்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கிப்போட்டது.

தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே தான் பிரவால் குப்தா தற்கொலைக்கு முன்பாக பதிவு செய்திருந்த வீடியோ அவரது செல்போனில் இருந்தது. அந்த வீடியோவில் பிரவால் குப்தா தனது மனைவி சினேகா குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதில் பிரவால் குப்தா கூறியதாவது:

''நான் இன்று எனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு முககிய காரணம் என் மனைவி சினேகா குப்தாவும், அவரது குடும்பமும் தான். கடந்த ஓராண்டாக நான் பல கொடுமைகளை அனுபவித்து விட்டேன். என்னுடைய மனைவி என்னை பலமுறை தாக்கி உள்ளார். மனரீதியாக தொல்லை தந்தார்.

சாப்பிடுவதற்கு கூட சரியான சாப்பாட்டை எனது மனைவி தருவது இல்லை. தீயில் கருகிய ரொட்டியை யை எனக்கு தருவார். அது ஏன் கருகி உள்ளது என்று கேட்டால் அடிப்பார்த்தார். என்னுடைய பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வாழ வேண்டும் என்று பிரஷர் செய்து வைத்தார்.

நானும் எனது மனைவியுடன் தனியாக வசித்தேன். சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதன்பிறகு என்னுடைய பெற்றோருடன் வசிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மனைவி விடவில்லை. ஆபாசமாக திட்டி என்னிடம் பலமுறை சண்டையிட்டார். என்னுடைய பெற்றோரையும் தரக்குறைவாக நடத்தி சண்டையிட்டார்.

என்னுடைய வீட்டிற்கு வரும் சகோதரியின் நடத்தை பற்றியும் கேள்வி எழுப்பி விஷமத்தை கக்கினார். என்னுடைய சொத்துகளை எனது மனைவியின் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மிரட்டுகின்றனர். எனது மாமனார் ராஜன் குப்தாவும் என்னை மிரட்டினார்.

சொத்துகளை எழுதி வைக்காவிட்டால் பொய்யான குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சிறைக்குள் தள்ளுவதாக மிரட்டினார். இதனால் எனது மனைவி சினேகா குப்தா, அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+