40 நாளில் 90 பேர் மதமாற்றம்... உத்தர பிரதேசத்தில் 55 பேர் மீது வழக்கு... 26 பேர் கைது
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 40 நாளில் 90 பேரை கட்டாயமாக மதம்மாற்றிய புகாரில் 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2வது முறையாக தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மாநிலங்களின் சில இடங்களில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

போலீசில் புகார்
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் ஹரிஹர்கஞ்ச் பகுதியில் சர்ச் உள்ளது. இங்கு கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி ஹிமான்ஷூ தீக்சித் போலீசில் புகார் செய்தார். அதில், சர்ச் பெயரை குறிப்பிட்டு 0 நாளில் 90 பேரை மதமாற்றியுள்ளனர். தொடர்ச்சியாக கட்டாய மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

55 பேர் மீது வழக்கு; 26 பேர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் கோத்வாலி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைையை தொடர்ந்து சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் 10 பெண்கள் உள்பட 55 பேர் மீது கோத்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என துணை போலீஸ் சூப்பிரண்டு(எஸ்பி) தினேஷ் சந்திர மிஸ்ரா கூறினார்.

அடையாளம் காணும் பணி
மேலும் அவர் கூறுகையில், ‛‛ஹரிகஞ்ச் பகுதியில் உள்ள ‛இவாஞ்சிக்கல் சர்ச் ஆப் இந்தியா' மூலம் மதமாற்றம் நடந்ததாக புகார் வந்தது. தற்போது 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் 20 பேர் அடையாளம் காணப்பட வேண்டி உள்ளது'' என்றார்.

பிரச்ச்னை- பேச்சுவார்த்தை
முன்னதாக நேற்று மாலையில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்புகளை சேர்ந்த சிலர் சர்ச்க்கு சென்றனர். இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications