Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாஜ்மஹால் இந்து கோயிலா? உள்ளே இருப்பதாக கூறப்படும் 22 அறைகளின் மர்மம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற பாஜக பிரமுகரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில் அந்த 22 அறைகளில் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாக உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரை ஓரமாக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினார்.

1632 முதல் 1653 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. வெண்மை நிறத்தில் அழகிய கட்டிட கலையுடன் கட்டப்பட்ட இதை தினசரி லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தாஜ்மஹாலும் கட்டுக்கதைகளும்

தாஜ்மஹாலும் கட்டுக்கதைகளும்

வெளிப்புறத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு உள்ளே பல மர்மங்கள் புதைந்து இருப்பதாகவும், குறிப்பிட்ட மதத்துக்கு சொந்தமான வழிபாட்டுத் தலம் என்றும் அதற்குள் சிலைகள் இருப்பதாகவும் கட்டுக்கதைகளும், சதி கோட்பாடுகளும் காலம் காலமாக பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

அறைகள் இருப்பது உண்மையா?

அறைகள் இருப்பது உண்மையா?

இந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 22 அறைகள், அறைகளே இல்லை என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வளைவான நீண்ட பாதையில் ஆங்காங்கே அறை கதவுகள் போன்று பொருத்தப்பட்டு உள்ளதாகவும், அந்த இடத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்றும் தொல்லியல் துறை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

தூய்மை பணி

தூய்மை பணி

இதுகுறித்து தாஜ்மஹாலில் பணிபுரிந்து வரும் தொல்லியல்துறை பணியாளர் ஒருவர் கூறுகையில், தாஜ்மஹாலின் அறைகள் வாரத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தூய்மை செய்யப்படுவதாகவும் அந்த நீண்ட பாதையில் அறைகளை போன்ற தடுப்புச் சுவர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

கதவுகள் பூட்டப்படுவது ஏன்?

கதவுகள் பூட்டப்படுவது ஏன்?

பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி கூறுகையில், "சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதில்லை என்பதால் கதவுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. தாஜ்மஹாலின் அடித்தளத்தில் எந்த விதமான மர்ம வரலாறும் கிடையாது. பார்வையாளர்கள் அதிகம் செல்லாத அப்பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு உள்ளது." என்றார்.

மதக்குறியீடுகள்

மதக்குறியீடுகள்

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் வடக்கு மண்டல இயக்குநராக பணியாற்றி கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற கே.கே.முஹம்மது தெரிவிக்கையில், தாஜ்மஹாலின் அடித்தளத்தில் எந்தவிதமான மதம் சார்ந்த குறியீடுகளும் கிடையாது என்கிறார். "முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கட்டிட வடிவமைப்புகள் சாதாரணமானவை. ஹுமாயூனின் கல்லறை மற்றும் சப்தர்ஜங்கின் கல்லறைகளிலும் இதுபோன்ற அடித்தளங்கள் உள்ளன." என்றார்.

காலியான சுவர்கள்

காலியான சுவர்கள்

"தாஜ்மஹாலின் அடித்தளத்தில் உள்ள அறைகளை தொல்லியல் ஆய்வுத்துறை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அவற்றின் சுவர்கள் காலியாகவே இருக்கின்றன. அதில் எந்தவிதமான குறியீடுகளும் இல்லை. பிரதானமான கல்லறை மற்றும் மினராக்களின் பீடத்தை உயர்த்துவதற்காகவே இதுபோன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஷாஜகான் என்ன சொன்னார்?

ஷாஜகான் என்ன சொன்னார்?

ஷாஜகான் தனது ஆட்சிகாலத்தின் அதிகாரப்பூர்வ தினமான பாத்ஷானாமாவில் தாஜ்மஹால் குறித்து தெரிவித்து இருக்கிறார். இது போன்ற கட்டிடத்தை அது கட்டப்பட்ட நாளிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட கட்டி இருக்க முடியாது என்று ஷாஜகான் கூறினார். அந்தளவுக்கு முகலாய கட்டிடக் கலை முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறது." என முஹம்மது தெரிவித்துள்ளார்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரி கூறுகையில், "தாஜ்மஹாலின் கட்டிட உறுதியை பரிசோதிப்பதற்காக அடிக்கடி அடித்தளத்துக்கு சென்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. கட்டிடத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டவுடன் மேல்தளத்தை உயர்த்தி தாங்கிப் பிடிப்பதற்காகவும், எடையை ஒரே சீராக அனைத்து பகுதிகளுக்கும் பரப்புவதற்காகவும் இதுபோன்ற வளைவுகள் அமைக்கப்படுகின்றன." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+