லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி: 5-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 14 தொகுதிகளில் தீர்மானிக்கும் 'ஜாதிகள்'

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் 51 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளும் அடங்கும்.

உத்தப்பிரதேசத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றுவது யார் என்பதைப் பொறுத்தே மத்தியில் அரியணை ஏறப்போவது யார் என்பது தெரியவரும். அதனால் உத்தரப்பிரதேச களநிலவரத்தை அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

இம்மாநிலத்தில் 14 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கிழக்கு உத்தப்பிரதேச தொகுதிகளான இவற்றில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவையாக ஜாதிகள் உள்ளன.

ராஜீவ் காந்தி தான் நம்பர் 1 ஊழல்வாதி... தன் மீது எந்த கறையும் இல்லை... பிரதமர் மோடி பேச்சு ராஜீவ் காந்தி தான் நம்பர் 1 ஊழல்வாதி... தன் மீது எந்த கறையும் இல்லை... பிரதமர் மோடி பேச்சு

நேபாள எல்லை தொகுதி

நேபாள எல்லை தொகுதி

நேபாள எல்லையில் இருக்கும் தவுரகரா தொகுதியில் குர்மி இன மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் யாதவர்களுக்கு அடுத்த அதிக எண்ணிக்கை கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் குர்மிகள்.

சீதாப்பூரில் தலித்துகள்

சீதாப்பூரில் தலித்துகள்

1999-ம் ஆண்டு முதல் பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது சீதாப்பூர் தொகுதி. தலித்துகளில் ஒரு பிரிவினராகிய பாசி சமூகத்தினர் கணிசமான அளவில் தீர்மானிக்கக் கூடியவர்களாக உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான குர்மிகளும் அதிக வாக்காளர்களாக உள்ளனர். இத்தொகுதியில் 25% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ராஜ்நாத்தின் லக்னோ தொகுதி

ராஜ்நாத்தின் லக்னோ தொகுதி

1991 முதல் 2004 வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இத்தொகுதியை தன் வசம் வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து லால்ஜி தாண்டன் இத்தொகுதி எம்.பியாக இருந்தார். கடந்த தேர்தலில் ராஜ்நாத்சிங் வென்று உள்துறை அமைச்சரானார். அவர் மீண்டும் தற்போது போட்டியிடுகிறார். உயர்ஜாதியினராகிய பிராமணர்கள் அதிகமாக உள்ளனர். அதே அளவுக்கு ஷியா பிரிவு முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளனர்.

மோகன்லால் கஞ்ச் தொகுதி

மோகன்லால் கஞ்ச் தொகுதி

1999-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது இத்தொகுதி. இத்தொகுதியில் பாசி எனப்படும் தலித்துகள், ஜாதவர்கள் தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

நேரு குடும்பத்து ரேபரேலி

நேரு குடும்பத்து ரேபரேலி

காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு குடும்பத்தின் வலிமை மிக்க கோட்டை ரேபரேலி தொகுதி. இந்திரா, சதீஷ் சர்மா, சோனியா காந்தி ஆகியோர் இத்தொகுதி எம்.பி.க்களாக இருந்துள்ளனர். இங்கு பிராமணர்கள் 10%; முஸ்லிம்கள் 15% உள்ளனர். கணிசமான அளவு பாசி எனப்படும் தலித்துகளும் இருக்கின்றனர்.

ஃபதேபூர் தொகுதியில்...

ஃபதேபூர் தொகுதியில்...

ஃபதேபூர் தொகுதியில் பாஜகவும் பகுஜன் சமாஜ்கட்சியும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

கெளசாம்பி தொகுதி

கெளசாம்பி தொகுதி

தனித்தொகுதியான கெளசாம்பியில் பாசி எனப்படும் தலித் சமூகத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். தாக்கூர் சமூகத்தினரும் குறிப்பிடும் வகையில் இருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய பாரபங்கி

சர்ச்சைக்குரிய பாரபங்கி

ஓபியம் போதைப் பொருள் சாகுபடியில் முக்கிய இடம்வகிப்பது பாரபங்கி தொகுதி. இங்கு பாசி மற்றும் சாம்பர் எனப்படும் தலித்துகள் பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். குர்மி இனத்தவரும் இங்கே தீர்மான்னிக்கக் கூடியவர்கள்.

ராகுலின் அமேதி

ராகுலின் அமேதி

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு கோட்டை அமேதி. இத்தொகுதியில் 20% பிராமணர்கள்; 15% தாக்கூர்கள் உள்ளனர். இத்தொகுதியின் 95% கிராமப்புறங்களை மட்டுமே உள்ளடக்கியது.

அயோத்தி தொகுதி

அயோத்தி தொகுதி

சர்ச்சைக்குரிய அயோத்தியை உள்ளடக்கியது ஃபைசாபாத் தொகுதி. அயோத்தி பிரச்சனையை பாஜக முன்வைத்த போதும் இத்தொகுதி பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, கம்யூனிஸ்ட் என மாறி மாறி வென்றுள்ளன. பிராமணர்கள், யாதவர்கள், தாக்கூர்கள், குர்மிகள் இங்கு தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். மேலும் 15% முஸ்லிம் வாக்காளர்களும் இங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராச் தொகுதி

பாராச் தொகுதி

காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் மாறி மாறி வென்ற தொகுதி. தலித்துகளும் முஸ்லிம்களும் இங்கு தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். முஸ்லிம்கள் இங்கு 40% பேர் உள்ளனர்.

ஓபிசி கெய்கர்சஞ்ச் கோட்டை

ஓபிசி கெய்கர்சஞ்ச் கோட்டை

குர்மிகள், லோதாக்கள் ஆகிய இரு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையினராக உள்ள தொகுதி கெய்சர்கஞ்ச். மேலும் 20% முஸ்லிம்கள் இங்கே உள்ளனர்.

கோண்டா தொகுதி

கோண்டா தொகுதி

கோண்டா தொகுதியில் 22% முஸ்லிம்கள், 20% பிராமணர்கள், 15% குர்மிகள் என அனைத்து தரப்பும் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். மேலும் தலித்துகள் 13%; யாதவர்கள், சத்திரியாக்கள் 8 % உள்ளனர்.

பாண்டா தொகுதி

பாண்டா தொகுதி

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் வசம் இருந்த இத்தொகுதியை கடந்த முறை பாஜக கைப்பற்றியது. இங்கு குர்மிகள், ஜாதவர்கள், மெளரியா/குஷவாகர்கள் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். 2014 தேர்தலில் மோடி அலை வீசியபோதும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஜாதவர்கள் வாக்குகளை அப்படியே அள்ளினார்,

English summary
In the fifth phase of voting, seven states comprising 51 Lok Sabha constituencies will vote in the Lok Sabha Election 2019 on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X