Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"லவ் ஜிகாத் குற்றத்திற்கு" 10 ஆண்டு சிறை.. உ.பி.யில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என‌ உத்தரபிரதேச பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 பாஜக‌

பாஜக‌

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்து வரலாற்று சாதனைபடைக்க பிரசாரங்களை முன்னெடுக்கிறது. இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், உத்தரப்பிரதேச‌
தேர்தல் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டம் என்று இந்த தேர்தல் அறிக்கையை மாநில பாஜக தெரிவித்துள்ளது.

 அமித்ஷா

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச‌ முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் ‛லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா-2022' என்னும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதையடுத்து அமித்ஷா பேசுகையில், ''நாங்கள் சொல்வதை செய்வோம். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச நீர் பாசன வசதி செய்து தரவும், கரும்பு விவசாயிகளுக்கு 14 நாட்களுக்குள் பணம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம். 300க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர எங்களுக்கு உதவுங்கள், எங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

 தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் அறிக்கையில் ''ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச டூ வீலர் என்று அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு பேருந்தில் இலவச பேருந்து பயணம் செய்யலாம், லதா மங்கேஷ்கரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், லதா மங்கேஷ்கரின் கலைநிகழ்ச்சிக் கலை அகாடமியை நிறுவுவோம்'' என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

 லவ் ஜிகாத்

லவ் ஜிகாத்

லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என‌ உத்தரபிரதேச பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்தை லவ் ஜிகாத் என்று சிலர் அழைக்கின்றனர். இதற்கு எதிராக கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச அரசு சட்டத்தை கொண்டு வந்தது. இந்து மதத்திலிருந்து ஒருவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்தது.

 சட்டம்

சட்டம்

இந்த சட்டம் கடந்த நவம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதுவே மைனர் பெண்ணை கட்டாயமாக மதம் மாற்றினால் 10 ஆண்டு சிறையும், 25 ஆயிரம் அபராதமும் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. அதோடு, பெரிய அளவில் யாராவது மதமாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிஹாத் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தண்டனையை உயர்த்தி தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+