வலியால் துடிக்கும் 3 மாத குழந்தை - சிகிச்சைக்கு பணமில்லாமல் கொலை செய்ய தாய் கைது
மருத்துவ சிகிக்சை செய்ய பணமில்லாமல் வலியால் துடித்த 3 மாத மகனை மாடியில் இருந்து வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் வறுமையில் வாடிய பெண் ஒருவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை செய்ய பணல்லாமல் மகனின் வேதனை தாங்காமல் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து வீசி கொலை செய்திருக்கிறார். சிசிடிவியில் பதிவான
காட்சிகளை வைத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கொடிது கொடிது வறுமை கொடிது என்பார்கள். வறுமையோடு நோயும் வந்தால் வேதனை தாங்கமுடியாததுதான். இன்றைக்கு மருத்துவ செலவுகளுக்காக பல லட்சம் செலவாகிறது. மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தனது முன்று மாத பிள்ளையை வீசி கொன்றுள்ளார் ஒரு பெண். உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த தம்பதியருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலமில்லாமல் போனது.
குழந்தையை எடுத்துக்கொண்டு கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்றார் அந்த பெண். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சள்காமாலை என்று சொன்னார்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நிறைய செலவாகும் என்றும் கூறி விட்டனர்.
குழந்தையை வைத்துக்கொண்டு வேதனைப்பட்ட அந்த பெண் திடீரென அந்த குழந்தையை காணவில்லை என்று கூறி அழுதார். மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை தேடிப்பார்த்தனர். சிசிடிவி காட்சியில் தேடியபோது அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போன ஒரு பெண் அதை மாடியில் இருந்து கீழே வீசியது தெரியவந்தது. அது யாரென்று பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையின் தாயே வீசி கொலை செய்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவரே தனது மனைவியின் செயலைப்பற்றி போலீசில் புகார் அளிக்கவே, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் பெற்ற தாயே தனது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications