மதரஸாக்களில் காலையில் தேசிய கீதம்.. சுதந்திர தினத்தன்று தேசிய கொடி கட்டாயம்.. உபியில் அமலாகும் விதி
லக்னோ: உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மதரஸா மாணவர்கள், காலை தொழுகையுடன் வகுப்பை தொடங்கும் முன் தேசிய கீதத்தை கட்டாயமாக பாட வேண்டும் என்றும், சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இசைப்பதையும் தேசியக் கொடியை ஏற்றுவதை கட்டாயமாக்கி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச மதரசா கல்வி வாரியக் கூட்டம், அதன் தலைவர் இப்திகார் அஹமது ஜாவேத் தலைமையில் வியாழன் அன்று தலைவர் இப்திகார் அகமது ஜாவேத் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் தகுதி தேர்வு
இந்த கூட்டத்தில் தேர்வுகள், வருகைப்பதிவு மற்றும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பல முடிவுகள் வாரியத்தால் எடுக்கப்பட்டது. மதரஸா ஆசிரியராக ஆவதற்கு முன் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அடிப்படையிலான மதரஸா ஆசிரியர் தகுதித் தேர்வை (MTET) தொடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. "ஆசிரியர் ஆட்சேர்ப்பில் MTETஐ கட்டாயமாக்க வாரியம் முடிவு செய்துள்ளது, ஆனால் தேர்வு செயல்முறை நிர்வாகத்தால் இறுதி செய்யப்படும். இது தொடர்பான முறையான முன்மொழிவு விரைவில் அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். " என ஜாவோத் கூறினார்.

தேசிய கீதம் கட்டாயம்
மேலும் "பல்வேறு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது, மதரஸா மாணவர்களிடமும் தேசபக்தியை வளர்க்க விரும்புகிறோம், அதனால் அவர்கள் நமது வரலாறு மற்றும் மத படிப்பைத் தவிர, கலாச்சாரத்தை மாணவர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். ஏற்கனவே சில மதரஸாக்களில் இது பாடப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து இப்போது அதை நாங்கள் கட்டாயமாக்குகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தனியார் பள்ளிகளில் எத்தனை மதரஸா ஆசிரியர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வாரியம் கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும், மாணவர் வருகையை சரிபார்க்க விவரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்றார்.

ஆசிரியர்-மாணவர் விகிதம்
"பல மதரஸாக்களில் ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைந்துள்ளது, மேலும் சிறந்த தேர்ச்சி விகிதத்திற்காக ஆசிரியர்களை மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறப்படுவதால், எண்ணிக்கையை அதிகரிக்க எங்கள் ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறோம் எனவும், மதரஸா ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் கான்வென்ட் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள், என்று ஜாவேத் மேலும் கூறினார்.

ஆதாருடன் இணைப்பு
மாணவர் எண்ணிக்கையில் பணிபுரிய, சரிபார்ப்பு மற்றும் வருகை நோக்கங்களுக்காக மாணவர் பதிவுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும், அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை அடுத்த கல்வி ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மதரஸா வாரியத் தேர்வுகள் மே 14 முதல் மே 27 வரை நடைபெறும் என்று கூறிய அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த கூட்டத்தில் இந்தி, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் போன்ற பாடங்கள் அடுத்த கல்வி அமர்வில் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் என்றும் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications