"இது என்ன இந்து-முஸ்லீம் மேட்ச் நடக்கும் இடமா?'' பாஜகவை சாடிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த்
லக்னோ: முசாபர்நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது என உத்தரப்பிரதேச பாஜகவை சாடியுள்ளார், பாரதிய கிஸான் யூனியனின் ராகேஷ் திகாய்த்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

பாரதிய கிஸான்
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரசாரங்களையும் அவர்களின் தேர்தல் யுத்திகளையும் சாடியுள்ளார், சம்யுக்த கிஸான் மோர்ச்சாவின் ஒரு அங்கமான பாரதிய கிஸான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாய்த். ''முஸாப்பர்நகர் இந்து முஸ்லிம் மேட்ச் நடக்கும் இடம் கிடையாது'' என்று பாஜகவைப் பார்த்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஜாட் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதக்கலவரம் கடந்த 2013ம் ஆண்டு முஸாப்பர்நகரில் ஏற்கெனவே நடந்திருக்கிறது.

ராகேஷ் திகாத்
ராகேஷ் திகாய்த் இது குறித்து தன்னுடைய டிவிட்டரில் கூறியிருப்பதாவது, ''மேற்கு உத்தரப்பிரதேசம் வளர்ச்சி குறித்து பேச வேண்டும். ஆனால் தற்போது அவர்கள் இந்து, முஸ்லிம், ஜின்னா, மதம் குறித்து பேசி வருகிறார்கள். இதனால் அவர்கள் ஓட்டுகளை இழந்து வருகிறார்கள். விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
ராகேஷ் திகாய்த் மேலும் கூறுகையில், ''விவசாய மசோதாக்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை சோதனையாக்கியது. பின்னர் அதைத் திரும்பப் பெற்றது பாஜக. இந்த தேர்தலில் பாஜக விவசாயிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்கப்போகிறோம். பிரதமர் மோடி விவசாயிகள் குறித்து வாய் திறப்பதில்லை, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் குறித்தும் எதுவும் பேசவில்லை, அதுகுறித்துப் பேசுவதையே பிரதமர் தவிர்த்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications