நாட்டை நடுங்க வைத்த கொலை.. 35 துண்டாக வெட்டப்பட்ட ஸ்ரத்தா! ஆப்தாபிடம் தொடங்கிய உண்மை அறியும் சோதனை
லக்னோ: ஷரத்தா வாக்கரை 35 துண்டுக்காக வெட்டி கொலை செய்த வழக்கில் அவரது காதலன் ஆப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை டெல்லியில் தொடங்கி இருக்கிறது.
ஆப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் ஸ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆப்தாப் பூனாவாலா - ஸ்ரத்தா வாக்கர் டெல்லியில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனைகள் தொடர்ந்து வந்து உள்ளன.
“பீஸ் பீஸா” வெட்டிடுவேன்.. 2020லேயே மகாராஷ்டிரா போலீஸில் ஸ்ரத்தா புகார்! உத்தவ் தலையை உருட்டும் பாஜக

பல துண்டுகள்
இந்த நிலையில்தான் டெல்லியில் தங்கி இருந்த இருவருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆப்தாப், ஸ்ரத்தாவை கொடூரமாக தாக்கி கொலை செய்து உள்ளதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. போலீசிடம் இருந்து தப்பிக்க ஸ்ரத்தாவின் உடலை ஆப்தாப் 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

6 மாதமாக எஸ்கேப்
மீதம் இருந்த உடல் பாகங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தவிர்க்கக ஃப்ரிட்ஜ் ஒன்றை ஆப்தாப் வாங்கி வந்து அதில் வைத்து பாதுகாத்து வந்தது விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. யாரிடமும் சிக்காமல் கடந்த 6 மாதங்களாக ஆப்தாப் வழக்கமாக பணிகளுக்கு சென்று வந்து இருக்கிறார். இந்த நிலையில்தான், ஸ்ரத்தாவின் தந்தை தனது மகளை காணவில்லை போலீசில் புகாரளித்தார்.

ஆப்தாப் விளக்கம்
இதனை தொடர்ந்துதீவிர விசாரணை நடத்திய போலீசார் ஆப்தாபை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் ஆப்தாப் தெரிவித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தன. தற்போது ஸ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கோபத்தில் என்ன செய்வதென்று அறியாமல் ஸ்ரத்தாவை கொன்றுவிட்டேன் என ஆப்தாப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் புகார்
இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஸ்ரத்தா ஆப்தாபுடன் ஒன்றாக வசித்து வந்தபோதும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் மீது 2020 நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரத்தா மகாராஷ்டிரா மாநிலம் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து உள்ளார். அதில், "அவன் என்னை இன்று கொலை செய்ய முயற்சி செய்தான். கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான்.

தொடர் துன்புறுத்தல்
அவன் என்னிடம் பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று எச்சரித்தான். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவும் அவன் இதேபோல் என்னை கடுமையாக தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க தைரியம் இல்லை. கொலை செய்துவிடுவேன் என்று ஆப்தாப் மிரட்டியதால் நான் அஞ்சினேன்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.

உண்மை கண்டறியும் சோதனை
போலீஸ் விசாரணையில் ஆப்தாப் சில தகவல்களை சொன்னாலும் அவை முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். எனவே முழுமையான உண்மையை கண்டறிய போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் பாலிகிராஃப் சோதனை மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்து நார்கோ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பல்வேறு உண்மைகள் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றன.