ஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகவில்லை... இறப்பு சான்றிதழை பாருங்க... காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு யோகி அரசு பதில்
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனோ 2வது அலையின்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின்போது 22,915 பேர் உயிரிழந்ததாகவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தொற்றுகள் அதிகரித்து காணப்பட்டது. மே மாதத்தில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில்
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில 7,447 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சம் 3,404 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை வரை இந்தியாவில் மொத்தம் 3,47,26,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து 7,886 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 86,415 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 391 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,76,869 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 70,46,805 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 135 கோடியே 99 லட்சத்தை எட்டியுள்ளது.

உ.பி. காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி
தற்போது உத்தரபிரதேச சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது கொரோனா மரணம் தொடர்பான கேள்விகளை காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் எழுப்பியிருந்தார். அதில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மாநிலத்தில் உயிரிழப்பு இல்லை என அமைச்சர்களால் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடைவதாக அமைச்சர்களே பலமுறை அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே குற்றச்சாட்டை அரசாங்கத்திற்கு வைத்தனர் என பேசினார்.

ஆக்ஸிஜன் கிடைக்காமல் மரணம்
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தீபக், மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழப்புகள் அதிகம் நிகழும் சம்பவங்கள் தற்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டன. ஆனால் அரசாங்கம் இதை மறுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகளின் மரணங்கள் குறித்த உண்மையான விவரங்கள் மாநில அரசிடம் உள்ளதா? இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் ஓடுவது அரசாங்கத்திற்கு தெரியாதா? ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுவதை எல்லாம் அரசாங்கம் கவனிக்கவில்லையான என கடுமையாக கேள்விகள் எழுப்பியிருந்தார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலி இல்லை
காங்கிரஸ் எம்எல்ஏ தீபக் சிங்கின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தால் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின்போது 22,915 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கான இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு இறப்பு சான்றிதழ்களில் கூட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு என குறிப்பிடவில்லை எனக் கூறிவிட்டு அமர்ந்து விட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications