இந்தியன் வங்கி அமவுண்ட் கட்டத்தில் 'துலாம் ராசி' என எழுதிய வாடிக்கையாளர்.. உ.பியில் நடந்த காமெடி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியன் வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் பே சிலிப்பில் அமவுண்ட் என்ற கட்டத்தில் துலாம் ராசி என்று எழுதியிருந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி நெட்டிசன்களை கலகலப்பாக்கியுள்ளது.

வங்கியில் பணம் செலுத்துவதற்கு தானியங்கி இயந்திரம் இப்போது நாடு முழுவதும் பெருகிவிட்டது.

நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் தானியங்கி இயந்திரங்கள் ஏ.டி.எம் இயந்திரங்களோடு சேர்த்து வங்கிகளின் சார்பில் வைக்கப்பட்டு இருக்கிறது.

தானியங்கி இயந்திரங்கள்

தானியங்கி இயந்திரங்கள்

இதனால், இப்போதெல்லாம் வங்கியில் நேரடியாக சென்று டெபாசிட் செய்வது பெருமளவு குறைந்துவிட்டது. தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த தெரியாத சிலரும் பெரும் தொகையை டெபாசிட் செய்பவர்களும் மட்டுமே வங்கியின் கிளைக்கு நேரடியாக சென்று டெபாசிட் செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் வங்கியில் பெரும் கூட்டம் டெபாசிட் செய்ய நிறைந்து இருக்கும்.

துலாம் ராசி என எழுதியிருப்பது

துலாம் ராசி என எழுதியிருப்பது

ஆனால், இப்போது இணைய வங்கி, தானியங்கி டெபாசிட் இயந்திரம் ஆகிய வசதிகள் பெருகிவிட்டதால் வங்கிக் கிளைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இன்றி மிக சாதாரணமாகவே உள்ளது. எனினும், ஒரு சிலர் இப்போதும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று டெபாசிட் செய்வதை காண முடிகிறது. அந்த வகையில், இந்தியன் வங்கிக்கு சென்று பணத்தை டெபாசிட் செய்வதற்காக பே சிலிப்பை நிரப்பிய ஒருவர் அதில் ரஷி (இந்தியில் பணம்) என்ற கட்டத்திற்கு நேராக துலாம் ராசி என எழுதியிருப்பது சிரிப்பை வரவழைக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.

இந்தியன் வங்கிக் கிளையில்

இந்தியன் வங்கிக் கிளையில்

உத்தர பிரதேசத்தில் மொராதாபாத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் இந்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்கிக் கிளையில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வந்த வாடிக்கையாளர் ஒருவர், செலுத்த வேண்டிய பணம் (Amount) என்ற கட்டத்தில் துலாம் ராசி என எழுதியிருக்கும் பேயிங் இன் சிலிப்-இன் புகைப்படம் (செலுத்து சீட்டு) இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன் ஒருவர் இதை பகிர்ந்து மக்கள் எவ்வளவு ஸ்மார்ட் ஆனவர்களாக இருக்கிறார்கள் என கேப்ஷனும் பதிவிட்டு இருந்தார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் எனத்தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழே சுவாரசியமாக பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், தன்ராஷி என எழுதியிருந்தால் இந்தக் குழப்பம் வாடிக்கையாளருக்கு வந்து இருக்காது என்று பதிவிட்டுளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், பார்த்தவுடன் அந்த வாடிக்கையாளர் தவறு செய்துவிட்டதாக தோன்றும். ஆனால், உண்மையில் धनराशि' (தொகை) என்று எழுதியிருக்க வேண்டும். ஆனால், அதில் राशि' (ராசி) என்று எழுதப்பட்டு இருக்கிறது.

ஊழியர் சரியாக புரிந்து கொண்டுள்ளார்

ஊழியர் சரியாக புரிந்து கொண்டுள்ளார்

எனவே அந்த நபர் தவறு செய்யவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். வாடிக்கையாளர் அதை தவறாக எழுதியிருந்தாலும் வங்கியில் இருந்த ஊழியர் சரியாக புரிந்து கொண்டு பணத்தை வாங்கியிருக்கிறார் என்றும் வங்கியின் முத்திரை மற்றும் ஊழியரின் கையெழுத்து இருப்பதை சுட்டிக்காட்டி சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+