ஓட்டு கேட்டு செல்லும் பாஜக வேட்பாளர்களை சேற்றை வாரி விரட்டியடிக்கும் மக்கள்.. உ.பி.யில் பரபர சம்பவம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் பாஜக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு பின்னால் எதிர்க்கட்சிகளின் சதி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
Recommended Video
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று மிக தீவிரமாக இருக்கிறது.

பாஜக வேட்பாளர்களின் பரிதாப நிலை
எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஓட்டு கேட்டு செல்லும் பாஜக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடித்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சேற்றை வாரி வீசினார்கள்
மேற்கு உ.பி.யில் உள்ள சூர் கிராமத்தில் பாஜக சிவால்காஸ் தொகுதி வேட்பாளர் மனிந்தர்பால் சிங் வாக்கு சேகரிக்க சென்றபோது அவருக்கு கருப்பு கொடி காட்டிய கிராம மக்கள் அவர் காரின் மீது கற்களால் தாக்கினார்கள், காரின் மீது சேற்றை வாரி வீசினார்கள். இதனால் பதறிப்போன மனிந்தர்பால் சிங் அங்கு இருந்து உடன்டியாக திரும்பி சென்றார். இதுபற்றி மனிந்தர்பால் சிங் கூறுகையில், 'என் கார் மீதும், என்னைப் பின்தொடர்ந்த ஏழு கார்கள் கல் வீச்சில் சேதம் அடைந்தாலும் நான் புகார் அளிக்கவில்லை. இவர்கள் எங்கள் சொந்த மக்கள், நான் அவர்களை மன்னிக்கிறேன். ஆனால் ஜனநாயகத்தில் வாக்கு கேட்பவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது' என்று கூறினார்.

20 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கற்களை வீசியவர்கள் ராஷ்ட்ரிய லோக் தளம் என்று எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ''வீடியோ காட்சிகள் மூலம் நாங்கள் அவர்களை அடையாளம் கண்டு வருகிறோம், நடவடிக்கை எடுப்போம்'' இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்போம்'' என்று சர்தானா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் லக்ஷ்மன் வர்மா கூறினார். கடந்த வியாக்கிழமை மாலை பாஜக எம்.எல்.ஏ.வும், முசாபர்நகரின் கட்டௌலி தொகுதியின் வேட்பாளருமான விக்ரம் சைனி, பைன்சி கிராமத்தில் ஓட்டு கேட்க சென்றார்.

5 ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள்?
அப்போது பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், விக்ரம் சைனியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ''5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஏன் நீங்கள் வந்திருக்கிறீர்கள்" என்று போராட்டக்காரர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினார்கள். விவசாயிகளின் எதிர்ப்பால் அவர் திரும்பி சென்றார். '' பிரச்சாரத்தின் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். பெரிதாக பிரச்சினை ஏதும் இல்லை'' என்று விக்ரம் சைனி கூறினார்.,

ஊருக்குள் விட மறுத்த மக்கள்
இதேபோல் நேற்று முன்தினம் பாக்பத்தில் உள்ள சப்ராலியில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் சஹேந்திர ரமலாவுக்கு மை தாஹா கிராம மக்கள் கருப்புக் கொடி காட்டினார்கள். அதே நாளில் நிருபாடா கிராமத்திற்குள் பிரசாரத்துக்கு செல்ல முயன்ற அவரை மக்கள் உள்ளேயே விடவில்லை. ''அரசு பிரதிநிதிகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கவில்லை ஏறினால், இப்படித்தான் அனுபவிக்க நேரிடும்'' என்று பாரதிய கிஷான் யூனியன் விவசாய சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் சதி
மக்களின் தொடர் எதிர்ப்பு குறித்து மேற்கு உ.பி.க்கான பாஜக துணைத் தலைவர் மனோஜ் போஸ்வால் கூறுகையில், ' இந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் எதிர்க்கட்சிகள் உள்ளன. "தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலோர் RLD அல்லது எதிர்க்கட்சிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். வரவிருக்கும் தேர்தல் போரில் அவர்கள் தோல்வியடையும் அவர்களின் விரக்தியை இது காட்டுகிறது'' என்று கூறினார்.

பரிதவிப்பில் முதல்வர்
மேற்கு உ.பி.யில் பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களிடம் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கமால் பிரசாரத்தில் முழுமையாக கண்வைக்கும்படி வேட்பாளர்களுக்கு அவர் அறிவுத்தியதாக தெரிகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications