Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிறைய நேரம் வீணாகி விட்டது.. இனியும் தாமதிக்க கூடாது.. பிரதமர் மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஏற்கனவே ஏராளமான நேரம் வீணாகி விட்ட நிலையில் இளைஞர்கள் புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை இரண்டு நிமிடத்தை கூட வீணடிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஆட்சி நிறைவடையும் தருவாயில் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உத்திரப்பிரதேசத்தில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 உ.பி.யில் பிரதமர் சுற்றுப்பயணம்

உ.பி.யில் பிரதமர் சுற்றுப்பயணம்

இந்நிலையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்தார். தற்போது 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றுவரும் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி முதல் கட்டமாக 9 கிலோமீட்டர் தொலைவில் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

 ஐஐடி பட்டமளிப்பு விழா

ஐஐடி பட்டமளிப்பு விழா

தொடர்ந்து கான்பூர் ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது, தற்சார்பு இந்தியா என்பது எவரையும் சார்ந்திருக்காத முழுமையான சுதந்திர வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் எனவும், ஒவ்வொரு நாடும் வெளிப்படுத்துவதற்கு ஒரு செய்தியையும், நிறைவேற்றுவதற்கு ஒரு இயக்கத்தையும் அடைவதற்கு ஒரு இலக்கையும் கொண்டிருக்கிறது எனக் கூறினார்.

 வாழ்க்கையில் சவால்கள்

வாழ்க்கையில் சவால்கள்


நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் சவால்கள் இருக்கும் எனக் கூறிய பிரதமர் நரேந்திரமோடி, அவற்றிலிருந்து தப்பி ஓடுகின்றவர்கள் அவற்றுக்கு பலியாகி விடுவார்கள் எனவும், ஆனால் சவால்களை நீங்கள் எதிர்கொண்டால் நீங்கள் வேட்டையாடுபவராகவும், சவால்கள்
வேட்டையாடப்படுபவையாகவும் மாறும் என்றார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்
     நேரம் வீணாகி விட்டது

    நேரம் வீணாகி விட்டது

    நாட்டின் சுதந்திரம் 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நமது சொந்த காலில் நிற்பதற்கு ஏராளமானவற்றை நாம் செய்திருக்க வேண்டும் எனவும், அதன் பிறகு காலம் மிகவும் கடந்து விட்டது, நாடு ஏராளமான நேரத்தை வீணாக்கியுள்ளது எனவும், இதற்கிடையில் இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன எனவே இரண்டு நிமிடங்களைக் கூட நாம் வீணாக்கக் கூடாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடையே உரையாற்றினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+