நானே களத்துல இறங்குறேன்..உபியில் யோகிக்கு ஜெர்க் கொடுக்கும் பிரியங்காகாந்தி, முதல்வர் வேட்பாளர்?
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதற்கு பிரியங்கா காந்தி உத்திர பிரதேசம் எங்கும் தனது முகத்தை காணலாம் என சூசகமாக பதிலளித்துள்ளார்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

உத்திர பிரதேச தேர்தல்
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் , இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

கட்சிகள் மும்முரம்
தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தீவிரம்
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பது வெற்று வார்த்தைகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
Recommended Video

முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?
தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பிரியங்கா காந்தி, உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்பட கூடிய முதல்-மந்திரி வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கூடிய வேறு யாருடைய முகமும் உங்களுக்கு தென்பட்டதா? ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம் என புன்சிரிப்புடன் பதிலளித்து உள்ளார். இதனால், வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தியே முன்னிறுத்தப்பட கூடும் என அவர் மறைமுக பதிலாக அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications