லட்சுமி தேவி“தாமரை” மீதுதான் வருவாங்க..“சைக்கிள்” “யானை” மீது வரமாட்டாங்க..சொல்கிறார் ராஜ்நாத் சிங்

Subscribe to Oneindia Tamil

லக்னோ : லட்சுமி தேவி எப்போதும் தாமரையில் தான் வருவார், அவர் சைக்கிளில் வருவதையோ, யானை மீது அமர்ந்திருப்பதையோ, அல்லது கையை அசைப்பதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா என உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் மாநிலத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் நான்கு கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன.

உபி சட்டசபை தேர்தல்

உபி சட்டசபை தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் தனது ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூறாவளி பிரச்சாரம்

சூறாவளி பிரச்சாரம்

அவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் உத்திரப்பிரதேசத்தில் முகாமிட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.காங்கிரஸ் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் இருந்தாலும் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு கடும் சவாலாக விளங்குகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர அகிலேஷ் யாதவ் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக செய்த தவறுகளையும் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

வாக்குசேகரிப்பு தீவிரம்

வாக்குசேகரிப்பு தீவிரம்

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கடந்த தேர்தலை போலல்லாமல் குறைவான இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. இருந்தும் கடந்த தேர்தலைப் போலவே அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் யோகி ஆதித்யநாத் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தொடர்ந்து மூன்று நாட்களாக உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ராஜ்நாத் சிங் பேச்சு

ராஜ்நாத் சிங் பேச்சு

இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தில் தாமரை மலர்ந்த மட்டுமே செழுமையும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது மிகத் தெளிவாக இருக்கிறது என பேசினார். எதிர்க்கட்சியான எஸ்பி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் "லட்சுமி தேவி எப்போதும் தாமரையில் வருவார், அவர் சைக்கிளில் வருவதையோ, யானை மீது அமர்ந்திருப்பதையோ, அல்லது கையை அசைப்பதையோ நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+