சிறு குறு, நடுத்தர தொழில்களை வளர்த்தெடுக்கும் மாநிலமாக உ.பி உள்ளது! குடியரசுத் தலைவர் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை (எம்எஸ்எம்இ) வளர்த்தெடுப்பதற்கான ஆரோக்கியமான சூழலை உத்தரப் பிரதேசம் உருவாக்கியுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

The President is proud that UP is a state that develops small and medium enterprises well

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தயாரிப்புகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக கிரேட்டர் நொய்டாவில் வர்த்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டிருந்தார். தற்போது இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி இக்கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை வளர்த்தெடுப்பதற்கான ஆரோக்கியமான சூழலை உத்தரப் பிரதேசம் உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் பொருளாதார ரீதியாக வளர்ந்திருக்கிறது. குறிப்பாக முதலீட்டை எளிமையாக்குதல் மூலம் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது. உ.பி., இன்று நாட்டில் வேகமாக வளரும் மாநிலமாக மாறியுள்ளது. மட்டுமல்லாது உ.பி.யில் எம்.எஸ்.எம்.இ.களுக்கு நல்ல சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவு உத்தரப் பிரதேசத்தில் 96 லட்சம் எம்எஸ்எம்இ யூனிட்கள் இருக்கின்றன.

கடந்த 2017-18ல் மாநிலத்தின் ஏற்றுமதி ரூ.88,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 1.75 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மாநில தொழில்முனைவோரின் கடின உழைப்பின் விளைவாக சாத்தியமாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் வெற்றியால் ஒட்டுமொத்த உலக சமூகமும் ஈர்க்கப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள ஆக்ரா, லக்னோ, வாரணாசி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் பல்வேறு ஜி-20 உச்சி கூட்டங்கள் நடைபெற்றன. இந்த வர்த்தக கண்காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றி பெரும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+