லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

16 சிலைகளை திருடிய மர்ம நபர்கள்.. கெட்ட கனவு வந்ததால் எடுத்த அதிரடி முடிவு! கடிதம் கைப்பற்றிய போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெருமாள் கோயில் ஒன்றில் பல கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளை திருடியவர்கள் பயங்கர கனவுகள் வருவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய சிலைகளை கோயில் அர்ச்சகர் வீட்டின் முன் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 9 ஆம் தேதி இரவு கோயிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் அங்கிருந்த அஷ்ட உலோகங்களால் ஆன 16 சிலைகளை திருடி சென்றனர். அதன் மதிப்பு பல கோடிகள் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை

மன அமைதி தரும் கூடலூர் ' திரிசூல வடிவ' காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்... பக்தர்கள் பால்குடம் மன அமைதி தரும் கூடலூர் ' திரிசூல வடிவ' காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்... பக்தர்கள் பால்குடம்

கோயில் அர்ச்சகர்

கோயில் அர்ச்சகர்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த கோயில் அர்ச்சகரின் வீட்டு வாயிலில் ஒரு கோணிப்பையில் கட்டப்பட்டு ஏதோ கிடந்தது. இதுகுறித்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்குபையில் என்ன இருக்கிறது என்பதை பார்த்தனர்.

16 சிலைகள்

16 சிலைகள்

அப்போது அதில் திருடப்பட்ட 16 சிலைகளில் 14 சிலைகள் இருந்தன. கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அதில் திருடர்கள் என்ன எழுதியிருந்தார்கள் என்றால், "நாங்கள் அந்த சிலையை கடத்திச் சென்றதிலிருந்தே எங்களுக்கு இரவில் கெட்ட கெட்ட கனவுகள் எல்லாம் வருகிறது. எங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

திருடர்கள் கடிதம்

திருடர்கள் கடிதம்

அதனால் சிலைகளை திரும்ப வைத்து விடுகிறோம்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மீதமுள்ள இரு சிலைகளை ஏன் திரும்ப தரவில்லை என்பது தெரியவில்லை. இதையடுத்து அந்த சிலைகளை போலீஸார் எடுத்துச் சென்றனர். கடிதத்தையும் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா

கர்நாடகா

இது போன்றதொரு சம்பவம் கர்நாடகாவிலும் நடந்துள்ளது. உப்பினஹள்ளியில் துர்காம்பாள் தேவி திருக்கோயிலில் இந்த மாதம் நுழைந்த திருடர்கள் அம்பாள் சிலை, அம்பாளின் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் ஆகியவற்றுடன் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து 5 நாட்கள் கழித்து கோயில் குருக்களின் வீட்டு வாசலில் அந்த சிலை, திருமாங்கல்யம் ஆகியவற்றுடன் தவறுக்கு பிராயசித்தமாக ரூ 101 ஐயும் திருடர்கள் வைத்திருந்தனர்.

இரண்டாவது சம்பவம்

இரண்டாவது சம்பவம்

கர்நாடகாவில் நடந்தது இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தவரேகெரே பகுதியிலும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பூட்டை உடைத்த திருடர்கள் அங்குள்ள விலைமதிப்பில்லாத பொருட்களை திருடிச் செல்வார்கள் என்று நினைத்தால் அவர்களோ சுவாமியை வணங்கிவிட்டு அந்த இடத்தை விட்டு வெறுங்கையுடன் சென்றது சிசிடிவி காட்சிகளில் வெளியானது.

English summary
Thieves return 14 idols stolen from a temple in Uttar Pradesh with a letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X