உ.பி.தேர்தல்: போராடி ஆட்சியை தக்க வைக்கும் பாஜக!மிரட்டலாக பின்தொடரும் அகிலேஷ் கட்சி:கருத்து கணிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் தற்போதைய ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று ஏ.பி.பி.- சிவோட்டர் இணைந்து நடத்திய 3-வது கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணி 325 இடங்களை வென்று மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 4 ஆண்டுகளில் உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தி அதிகரித்திருக்கிறது என்றே கூறப்பட்டு வருகிறது.

பிரமாண்ட வெற்றி கிடைக்காது
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் மீண்டும் உ.பி.யில் பாஜக ஆட்சிதான் என்று அடித்துச் சொல்லுகின்றன. ஆனால் 2017-ம் ஆண்டு பாஜக 312 இடங்களை வென்றதைப் போல பிரமாண்ட வெற்றி எல்லாம் இந்த முறை சாத்தியமே கிடையாது என்றும் திட்டவட்டமாக சொல்கின்றன கருத்து கணிப்புகள்.

பாஜக அரசு மீது அதிருப்தி
விவசாயிகள் போராட்டம், கொரோனா கால நெருக்கடிகள், ஜாதிய ரீதியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீதான அதிருப்தி, சிறுபான்மையினருடனான மோதல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் என பல்வேறு காரணிகள், பாஜகவுக்கு சவாலாக இருக்கின்றன என்கின்ற இக்கருத்து கணிப்புகள். குறிப்பாக லக்கிம்பூர் படுகொலைகள், மேற்கு உ.பி.யில் மதமோதல்கள் பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாமாம்.

3-வது கருத்து கணிப்பு
ஏ.பி.பி.-சிவோட்டர் நடத்தி இருக்கும் 3-வது கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 212 முதல் 224 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 தொகுதிகளை பாஜக எதிர்க்கட்சிகளிடம் பறிகொடுக்கும் என்பதை மீண்டும் மீண்டும் இக்கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 151 முதல் 163 இடங்கள் வரை கிடைக்கும் என்கிறது இந்த சர்வே முடிவுகள். 3-வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 12 முதல் 24 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 10 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது இந்த கணிப்பு முடிவுகள்.

வாக்கு சதவீதம்- ஒப்பீடு
வாக்கு சதவீதம் அடிப்படையிலான கருத்து கணிப்பு விவரங்கள்: பாஜக கூட்டணிக்கு 40.4%; சமாஜ்வாதி கூட்டணிக்கு 33.6%; பகுஜன் சமாஜ் கட்சிக்கு 13.2% காங்கிரஸ் கட்சிக்கு 7.3% வாக்குகள் கிடைக்கக் கூடும் என்கிறது ஏ.பி.பி-சிவோட்டர் சர்வே. 2017 தேர்தலில் பாஜக அணிக்கு 41.4% வாக்குகள் கிடைத்திருந்தது. இம்முறை இந்த வாக்கு சதவீதம் சற்றே குறையக் கூடுமாம். ஆனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தமது வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்திருக்குமாம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் சுமார் 10% வாக்குகளை இழக்க நேரிடும் என ஒப்பிட்டுக் காட்டுகிறது இந்த கருத்து கணிப்புகள்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications