இந்தியாவை தலிபான்மயமாக்க போறீங்களா?எல்லாம் ஆப்கானில் வெச்சுக்கோங்க...ஓவைசி மீது யோகி பொளேர் அட்டாக்
லக்னோ: இந்தியாவை தலிபான் மயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள கூடாது என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசியை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.
ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராக பதவி வகிப்பார் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி பேசியது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஹிஜாப் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கருத்துகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓவைசி தெரிவித்த கருத்து விவாதப் பொருளாகி உள்ளது.
இது தொடர்பாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: இந்தியாவை தலிபான் மயமாக்க விரும்புகிறாரா ஓவைசி? இதுபோல் பேசி விவாதங்களை நடத்துகிற வேலைகளை எல்லாம் ஆப்கானிஸ்தானில் வைத்து கொள்ளட்டும். இத்தகைய நபர்கள்தான் நாட்டின் பெண்களின் முன்னேற்றங்களுக்கு தடையாக உள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு நபரும் தன் கருத்துகளைத் தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அதேநேரத்தில் டிரஸ்கோட் என்பதை எல்லாம் நாங்கள் அமல்படுத்த மாட்டோம். இருந்தபோதும் ஒவ்வொரு அமைப்பும் சீருடையை பின்பற்ற வேண்டியது கட்டாயம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications