லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கோவிலாகும் ராமர் கோவில்.. 2023ல் பிரமாண்டமாக தயாராகும்.. உ.பி. பிரசாரத்தில் யோகி பேச்சு

By
Google Oneindia Tamil News

லக்னோ: 2023ம் ஆண்டுக்குள் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, என உத்தரப்பிரதேச தேர்தல் களம் பாஜக நட்சத்திரங்களால் நிரம்பி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.

70 வருடமாக குடிக்க தண்ணி இல்லாம இருந்தாங்க.. பிரசாரத்தில் எதிர்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்70 வருடமாக குடிக்க தண்ணி இல்லாம இருந்தாங்க.. பிரசாரத்தில் எதிர்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கார்ஹலில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இங்குதான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அப்போது அவர் பேசுகையில், ''2023ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் தயாராகிவிடும். இந்த ராமர் கோயில் இந்தியாவின் தேசிய கோயிலாக‌ இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

யோகி ஆதித்யநாத் மேலும் பேசுகையில், ''கர்ஹால் மட்டுமல்ல இந்த மாவட்டம் முழுதிலும் பாஜக வெல்லும். கர்ஹால் சட்டசபைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் தங்கள் உடனடி தோல்வியைக் கண்டு பொறுமை இழந்துள்ளனர். பாஜக மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் மீதான தாக்குதலே, அவர்களது கோழைத்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

புல்டோசர்

புல்டோசர்

கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர்கள் அனைவரும், தேர்தலின் போது வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தேர்தல் முடிவுகள் வரும் நாளான‌ மார்ச் 10ஆம் தேதிக்குப் பிறகு புல்டோசர்களைப் பயன்படுத்தப்படும். சமாஜ்வாதி மூத்த தலைவர் சிவபால் சிங் யாதவுக்கு பிரசார மேடையில் ஒரு நாற்காலி கூட கொடுக்கவில்லை. அவரைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது''.

அயோத்தி

அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக தான் காரணம் என தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த பிரசாரத்தைக் கையிலெடுத்தது பாஜக. அயோத்தியில் தான் உபி முதல்வர் யோகி போட்டியிடவிருந்தார். அங்கு கோயிலுக்கு அருகே கடை நடத்திவந்தவர்களிடம் நிலம் பெறப்பட்டதால், அதிருப்தி நிலவியது. அதனால் யோகி கோரக்பூரில் போட்டியிடுகிறார். இந்நிலையில், 2023ல் ராமர் கோயில் திறக்கப்படும் என பிரசாரத்தில் தெரிவித்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

English summary
A grand temple of Lord Ram will be ready in Ayodhya by 2023. This Ram Temple will be 'Rashtra Mandir' of India saysUP CM Yogi Adityanath in Karhal, Mainpuri. Samajwadi chief Akhilesh Yadav is contesting the Assembly poll from Karhal seat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X