உ.பி.யை மீண்டும் கலவரக்காரர்கள் கையில் கொடுத்துவிடாதீர்கள்.. டிஜிட்டல் பிரசாரத்தில் மோடி பேச்சு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அமைதி நிலவுகிறது. மீண்டும் கலவரக்காரர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்துவிடாதீர்கள் என பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டி நிலவுகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக இன்னும் துரிதமாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

பிரசாரம்
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கி இருந்தார். உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில தினங்களில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கான பிரம்மாண்டமான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு பிரசாரத்தைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி
இந்த டிஜிட்டல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ''சுதந்திரத்துக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடந்துள்ளன. பல அரசுகள் வருவதையும் போவதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கு அமைதியை நிலைநாட்டவும், தொடர் வளர்ச்சிக்காகவும், நல்லாட்சிக்காகவும், மாநிலத்தின் பாதுகாப்புக்காகவும் இந்த தேர்தல் தனித்துவமானது. இந்த தேர்தலின் மூலம் புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும். கலவரக்காரர்கள் மற்றும் மாபியாக்கள் உத்தரப்பிரதேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி.

வாக்குறுதி
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. கலவரக்காரர்கள் மற்றும் மாபியாக்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்து விடாதீர்கள். சமாஜ்வாதி கட்சியோ, அவர்களின் கூட்டணி கட்சியினரோ இந்த மாநிலத்திற்கு என்ன செய்துள்ளார்கள். தற்போது வெளியான பட்ஜெட்டால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடைந்துள்ளனர்; விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுகிறது'' என்று பேசியிருக்கிறார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications