உ.பி. அரசியல் வரலாற்றிலேயே.. தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகும் முதலாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம் உ.பி. பாஜக இரு வரலாற்று சாதனைகளை பதிவு செய்கிறது.
Recommended Video
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 இடங்களுக்கு சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டிவிட்டது. உ.பி.யில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த பெரும்பான்மை பலத்தை பாஜக தாண்டியுள்ளது. பாஜக 222 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக எத்தனை இடங்கள்
பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மெஜாரிட்டியை தாண்டிவிட்டதால் பாஜகவே உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 47 இடங்களிலும், மாயாவதி கட்சி 19 இடங்களிலும் வென்றுள்ளது.

சட்டம் ஒழுங்கு
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் அவ்வப்போது பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் யோகி அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும் மக்கள் இத்தகைய வெற்றியை வாரி கொடுத்துள்ளார்கள்.

2024 லோக்சபா தேர்தல்
உ.பி. சட்டசபைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் என்பதால் அந்த தேர்தல் உற்று நோக்கப்பட்டது. தற்போது இந்த சட்டசபை தேர்தலில் பாஜக வென்றதன் மூலம் இரு சாதனைகளை படைத்துள்ளது. ஒன்று 1985ம் ஆண்டுக்கு பிறகு உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது பாஜக.

வரலாறு திரும்புகிறது
1980 ஆம் ஆண்டும் 1985 ஆம் ஆண்டும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதன் பிறகு எந்த கட்சியும் மீண்டும் ஆட்சியை அமைக்கவில்லை. ஜனதா தளம், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என மாறி மாறி ஆட்சி அமைத்தன. இந்த முறை 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும் பாஜகவே ஆட்சியை தொடர்கிறது.

மீண்டும் முதல்வராக யோகி தேர்வு
அது போல் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்ற நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். தற்போது 2022 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். இதுவரை உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த முதல்வர்களில் எந்த முதல்வரும் மீண்டும் வென்று முதல்வரானதில்லை. ஆனால் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக உள்ளார். இதுவும் ஒரு சாதனை. வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பாஜக உ.பி.யில் இந்த இரு சாதனைகளை புரிந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications