காந்தம் போல இழுத்த அகிலேஷ் யாதவ்.. சாரை சாரையாக குவிந்த மக்கள்.. "கர்ஹால்" படைத்த புது சாதனை
லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹாலில் நேற்று அதிகபட்ச வாக்குகள் பதிவாகி சாதனை படைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது.

அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கர்ஹாலில் போட்டியிடுவதாக அறிவித்ததில் இருந்து, இந்த தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டது. அகிலேஷ் யாதவுக்கு எதிராக பாஜக சட்டத்துறை அமைச்சர் சத்யபால் சிங் பாகேலை நிறுத்தியது. இவர் சமாஜ்வாதி கட்சியில் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவின் பாதுகாவலரக இருந்தவர். இதனால் கடும் போட்டி நிலவும் என பாஜக எதிர்பார்த்தது.

கர்ஹால்
அகிலேஷ் யாதவுக்கு எதிராக பாஜக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன் கர்ஹாலில் பிரசாரம் செய்தார். இந்த தொகுதியில், 3.71 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.25 லட்சம் பேர் யாதவர்கள், 18 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

வாக்குப்பதிவு
தீவிர பிரசாரத்தால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. அதுபோலவே கர்ஹாலில் காலை முதல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் மாலை 5 மணி நிலவரப்படி 62.32 சதவிகித வாக்கு பதிவாகி இருந்தது. 1951க்குப் பிறகு கர்ஹால் தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து இரண்டாவது பெரிய வாக்குப்பதிவு நேற்று நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சாதனை
கர்ஹாலில் 1951ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இதே அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 1974ல் நடந்த தேர்தலில் அதிகபட்சமாக 71.41 சதவிகித வாக்குகள் பதிவானது. இதுதான் தற்போதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவாக உள்ளது.. இந்நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 62.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இரண்டாவது அதிகபட்ச வாக்குப்பதிவாக சாதனை படைத்திருக்கிறது கர்ஹால். இதனால் அகிலேஷ் யாதவ் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications