புதைக்குழியில் சிக்கிய முதியவர்! காப்பாற்றாமல் சிரித்தபடி வீடியோ எடுத்த போலீஸ்! உபியில் பரபர சம்பவம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் புதைக்குழியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை காப்பாற்றாமல் அவரை பார்த்து சிரித்தபடியே போலீஸ்காரர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பலரது கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
ஆபத்தில் இருக்கும் நபரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் அதை எள்ளி நகையாடும் விதமாக காவலர் நடந்து கொண்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதுபோன்ற சில போலீஸாரால் தான் ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்படுவதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தீரமான போலீஸார்..
மக்களை பாதுகாக்கவும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதனை முன்சென்று தடுக்கவுமே காவல்துறை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில், தனது உயிரையும் கொடுத்து மக்களை காப்பாற்ற துணிந்த தீரர்கள் காவல்துறையில் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அதுபோன்ற வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏதோ சம்பளத்துக்காக வந்தோமா.. வேலை பார்த்தோமா என்பதோடு பல போலீஸ்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். காவல்துறையில் பணம் கொடுத்து வேலைக்கு சேரும் போக்கு என்றைக்கு வந்ததோ, அன்றைக்கே திறமையான நபர்கள் காவல்துறைக்கு வருவது குறைந்துவிட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சில வருடங்களாகவே இந்த மாவட்டத்தில் மழைப்பொழிவின் அளவு குறைவாக உள்ளது. இதனால் இங்குள்ள ஆறுகள், வாய்க்கால்கள் வறண்டு போய் மைதானங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்குள்ள வீடுகளில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. நடந்து சென்று ஏதாவது நீர்நிலைகளில் இருக்கும் சிறிது நீரை மட்டும் மக்கள் எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் மண்ணோடு கலந்த நீரையே வடிகட்டி அந்த மக்கள் குடித்து வருகின்றனர்.

புதைக்குழியில் சிக்கிய முதியவர்
இந்நிலையில், நேற்று தனது வீட்டுக்கு குடிநீரை எடுப்பதற்காக 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவர் பல கிலோமீட்டர் தூரம் உள்ள நீர் நிலைக்கு சென்றிருக்கிறார். அங்கு நீர் மிகவும் குறைவாக இருந்ததால் குடத்தை தன் தலை மீது வைத்துக்கொண்டு அங்கிருக்கும் சகதி மண்ணில் அவர் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள புதைக்குழியில் முதியவர் கால் வைத்து விட்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர், வெளியே வர முடியாமல் தவித்தார். மேலும், அவரை புதைக்குழி உள்ளே இழுத்தது. நல்ல வேளையாக அங்கு வந்த சில சிறுவர்கள், முதியவர் சிக்கியிருப்பதை பார்த்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

வீடியோ எடுத்த போலீஸார்
இதையடுத்து அங்கு வந்த அவர்கள், முதியவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் சிறிது முன்னால் சென்றாலும் காப்பாற்ற வந்தவர்களும் புதைக்குழியில் சிக்க நேரிடும். இதனால் அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். எனினும், உடனடியாக வராமல் ஒரு மணிநேரத்துக்கு பிறகு அங்கு ஒரே ஒரு போலீஸ் காவலர் வந்துள்ளார். அதற்குள்ளாக அக்கம்பக்கத்தில் உள்ள குச்சிகளை எடுத்து வந்து அங்கிருந்த மக்களே அந்த முதியவரை ஓரளவுக்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர். இவை அனைத்தையும் பார்த்த பிறகும், முதியவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த அந்த காவலர், தனது செல்போனை எடுத்து அந்த முதியவர் படும் பாட்டை சிரித்தப்படியே அவர் வீடியோ எடுத்தார். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி, அந்த காவலருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications