அயோத்தி ராமர் கோவிலில்.. சினிமா பாடலுக்கு குத்தாட்டம்.. 4 பெண் போலீசுக்கு அதிரடி தண்டனை.. போச்சே
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி என்ற இடத்தில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் அவர்களுக்கு அதிரடியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், சட்ட போராட்டங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் 110 ஏக்கரில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் அமைய உள்ளது. இந்த கோவில் கட்டும் பணியை 2020 ஆகஸ்ட் 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

விறுவிறுப்பாக கட்டுமான பணி
இந்த கோவில் கட்டும் பணியை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கோவில் கர்ப்பகிரஹ பணி முடிக்கப்பட உள்ளது. 2024ல் கோவிலின் முழு பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசாார்
இதற்கிடையே கோவலை சுற்றி பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் போலீசார் கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நடனமாடிய பெண் கான்ஸ்டபிள்கள்
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் கான்ஸ்டபிள்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வெளியானது. அதாவது 3 பெண் போலீசார் போஜ்புரியின் சினிமா பாடலுக்கு நடனமாடி, ஒரு பெண் போலீஸ் அதனை வீடியோவை பதிவு செய்தார். அவர்கள் போலீஸ் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் நடனமாடினார்கள். இருப்பினும் இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

பாய்ந்த நடவடிக்கை
இந்நிலையில் தான் பணியின்போது பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாடியதாக கூறி அவர்கள் 4 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்படி பெண் கான்ஸ்டபிள்களான கவிதா படேல், காமினி குஷ்வாஹா, காசிஷ் சாகினி, சந்தியா சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சீனியர் சூப்பிரண்டு முனிராஜ் பிறப்பித்தார். மேலம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் எஸ்பி (பாதுகாப்பு) பங்கஜ் பாண்டேவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications