சாதி வெறிய தகர்த்துட்டோம்.. மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான்.. 80 % இடங்களில் வெற்றி.. உபியில் யோகி!
லக்னோ : கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாதிவெறி தகர்த்தப்பட்டுள்ளது எனவும் பரம்பரை அரசியல் செய்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது 80 சதவீத இடங்களை கைப்பற்றி பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

7ஆம் கட்ட வாக்குப் பதிவு
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு 14ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப் பதிவு 20ஆம் தேதியும், 4ஆம் கட்டமாக வாக்குப் பதிவு 23ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்கு பதிவு 27ஆம் தேதியும் நடைபெற்றது. கடைசியாக 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 3ஆம் தேதியும் நடைபெற்று முடிவடைந்தது.

தீவிர பிரச்சாரம்
உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 349 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் அதாவது மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

யோகி ஆதித்யநாத்
இந்தநிலையில் பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் "இதுவரை நடைபெற்ற 6 கட்ட வாக்குப் பதிவில் தேசியவாதம் , வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்காக பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என கூறினார். மேலும் உத்திரப்பிரதேசத்தில் சாதி தகர்க்கப்பட்டு உள்ளது எனவும் பரம்பரை பரம்பரையாக அரசியல் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்து விட்டதாக கூறினார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஏழாவது கட்ட வாக்குப்பதிவிலும் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.
Recommended Video

மீண்டும் வாய்ப்பு
வாக்குப்பதிவு முடிந்து மார்ச் மாதம் பத்தாம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 80 சதவீத இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர் , குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார்கள் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். உத்திர பிரதேச மக்கள் எதிர்க்கட்சிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது" எனக் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications