பெண்ணுடன் உல்லாசம்.. இணையத்தில் லீக்கான காங்கிரஸ் தலைவரின் ஆபாச வீடியோ.. யார் இந்த யூனஸ்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் வேண்டாம்.. வேண்டாம்.. என்று பயந்து விலகி சென்ற பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவிக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் யூனஸ் சவுத்ரி. இவர் பாக்பத் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யூனஸ் சவுத்ரி காங்கிரஸ் சார்பில் சாபிராலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார்.

uttar pradesh congress

இந்த தொகுதியில் ஆர்எல்டி கட்சியின் அஜய் குமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 880 ஓட்டுகள் பெற்று வென்றார். பாஜக வேட்பாளர் சாகேந்தர் சிங் 82,372 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் யூனஸ் 1,239 ஓட்டுகள் மட்டுமே பெற்று 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். பகுஜன் சமாஜ் மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை விட பின்தங்கியிருந்தார் யூனஸ் சவுத்ரி.

தேர்தல் தோல்விக்கு பிறகு யூனஸ் சவுத்ரி பாக்பத் மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது யூனஸ் சவுத்ரி பெண் ஒருவருடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாச வீடியோ வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது. அதாவது வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணுடன் யூனஸ் சவுத்ரி தனது அந்தரங்க உறுப்பை காட்டி தவறான உறவுக்கு அழைக்கிறார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கிறார்.

ஆனாலும் யூனஸ் சவுத்ரி விடவில்லை. அவர் அந்த பெண்ணை நெருங்கி செல்கிறார். இந்த வேளையில் பயந்துபோன அந்த பெண் ‛‛தயவு செய்து எதுவும் செய்யாதீங்க. அம்மா வந்து விடுவார். இது ரொம்ப தப்பு. ஒரு நிமிடம் நில்லுங்கள். எனது அம்மா வந்துவிடுவார். வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்'' என கெஞ்சுகிறார்.

ஆனால் அதனை கேட்காமல் யூனஸ் சவுத்ரி அந்த பெண்ணை நெருங்கி சென்று உல்லாசம் அனுபவிக்கிறார். இந்த வீடியோவை பத்திரிகையாளர் சச்சின் குப்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛இது யூனஸ் சவுத்ரி. பாக்பத் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவர். பிறப்புறுப்பை பெண்ணிடம் காண்பித்து உல்லாசம் அனுபவிக்கிறார். '' எனக்கூறி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தற்போது யூனஸ் சவுத்ரியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து யூனஸ் சவுத்ரி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி யூனஸ் சவுத்ரியை பாக்பத் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து இன்று நீக்கி அதிரடியாக கட்சி உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+