Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த பிஎம்! யோகி ஜெயிச்சாருன்னா அவ்வளவுதான்.. அகிலேஷ் விடுத்த எச்சரிக்கை.. மோடிக்கு அட்வைஸா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்த கருத்து ஒன்று தேசிய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலில் இந்த உத்தர பிரதேச தேர்தல் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இந்த உ.பி தேர்தல் பார்க்கப்படுகிறது. 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்க உள்ளது. உத்தர பிரதேசத்தில் 7வது கட்ட தேர்தல் மார்ச் 7ம் தேதி நடைபெறும். தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இந்த நிலையில் ஆஜ் தக் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச தேர்தல் குறித்து பேட்டி அளித்தார். அதில், உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாதி கட்சிக்குத்தான் மக்கள் அதிக ஆதரவு அளித்து வருகிறார்கள். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவை காண முடிகிறது. விவசாயிகளை, சிறுபான்மையினரை, இந்துக்களை பாஜக ஏமாற்றிவிட்டது. மக்களுக்கான நலத்திட்டங்களை செய்யாமல் பிரிவினை வாத அரசியலை பாஜக மேற்கொண்டு வருகிறது.

சமாஜ் வாதி கட்சி

சமாஜ் வாதி கட்சி

பாஜகவிற்கு மக்கள் டாட்டா காட்ட போகிறார்கள். பாஜக ஆட்சிக்கு உத்தர பிரதேச தேர்தல் முடிவு கட்டும். கொரோனா காலத்தில் மக்களை காக்க பாஜக தவறிவிட்டது. கொரோனாவை கையாள தெரியாமல் மக்களின் உயிரிழப்பிற்கு பாஜக காரணமாக அமைந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு கீழ் உத்தர பிரதேசத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை. முக்கியமாக பெண்கள் உத்தர பிரதேசத்தில் பாதுகாப்பு இன்றி இருக்கிறார்கள்.

 பாதுகாப்பு இல்லை '

பாதுகாப்பு இல்லை '

ஹத்ராஸ், உன்னோவ் சம்பவங்கள் மறந்துவிட்டதா? NCRB புள்ளி விவரங்களை பாருங்கள். பஞ்சாப்பில்தான் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரே தலைமறைவாகி இருக்கிறார். அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது. கலவரங்கள், பாலியல் வன்புணர்வுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தர பிரதேசத்தில் உச்சம் தொட்டுள்ளது. ஆனால் ஆதித்யநாத் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆதித்யநாத்

ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் ஒருவேளை பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஆதித்யநாத் முதல்வர் ஆனாலும் அவர் நீண்ட காலம் முதல்வராக ஆட்சியில் இருக்க மாட்டார். அவரை பாஜக பிரதமர் வேட்பாளர் ஆக்கிவிடும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆதித்யநாத்தான் இருப்பார். பாஜகவின் திட்டம் அதுவாகவே இருக்கும் என்று அகிலேஷ் யாதவ் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கும் ஆதித்யநாத்திற்கும் இடையில் சிண்டு முடிய அகிலேஷ் யாதவ் நினைக்கிறார் என்று தேசிய அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைமுக எச்சரிக்கை

மறைமுக எச்சரிக்கை

ஆதித்யநாத் ஜெயிச்சி முதல்வர் ஆகிட்டார்னா.. உங்க பதவிக்குத்தான் சிக்கல் என்று மோடிக்கு அகிலேஷ் யாதவ் மறைமுக எச்சரிக்கையை விடுக்கிறார் என்று தேசிய அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். கொரோனா சமயத்தில் ஏற்கனவே ஆதித்யநாத் - மோடி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் தினேஷ் சர்மா என்ற தனக்கு நெருக்கமான நபரை மோடி உத்தர பிரதேசத்திற்கு அனுப்பினார். அதோடு அவருக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட்டது.

அகிலேஷ் யாதவ் மோடி

அகிலேஷ் யாதவ் மோடி

ஆதித்யநாத்திற்கு கால்கட்டு போடும் வகையில் தனக்கு நெருக்கமான நபரை மோடி துணை முதல்வர் ஆக்கியதாக அப்போதே செய்திகள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆதித்யநாத்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறி மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பேசி இருக்கிறார். இதற்கு பாஜக என்ன பதில் அளிக்கும்.. பிரதமர் மோடி இந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வார் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+