லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமர் கிட்டவே கேட்டேன்.. நல்லவேளை அயோத்தியில் யோகி போட்டியிடலை.. புயலை கிளப்பிய ராமர் கோவில் பூசாரி!

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடாதது குறித்து ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பேட்டி அளித்து உள்ளார்.

பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த வாரம் வெளியிட்டது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான் உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் யோகி அயோத்தி தொகுதியில் போட்டி?.. பாஜகவின் மாஸ்டர் பிளான்

அயோத்தி

அயோத்தி

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவதாக இருந்தது. அயோத்தி இல்லை என்றால் மதுராவில் ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தொகுதி மாற்றப்பட்டு அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கி இருந்தாலும் அங்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதால் யோகி ஆதித்யநாத் கோரக்பூரை தேர்வு செய்துள்ளார்.

ஆதித்யநாத் அயோத்தி

ஆதித்யநாத் அயோத்தி

பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின் பாஜக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அயோத்தியில் நடத்த உள்ளாட்சி தேர்லில் பாஜக படுதோல்வி அடைந்தது. கடந்த வருடம் அயோத்தியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 40 பஞ்சாயத்து இடங்களில் வெறும் 8ல் மட்டுமே பாஜக வென்றது. அங்கு சமாஜ்வாதி 22 இடங்களை வென்றது. இது சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஆதித்யநாத் அயோத்திக்கு பதிலாக கோரக்பூரை தேர்வு செய்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இந்த நிலையில் அயோத்தியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடாதது குறித்து ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பேட்டி அளித்து உள்ளார். அவர் அளித்துள்ள போட்டியில், அயோத்தியில் ஆதித்யநாத் போட்டியிடாதது நல்லதுதான். அங்கு அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. அயோத்தியில் ஆதித்யநாத் எளிதாக வென்று இருக்க முடியாது.

ராமர் சொன்னார்

ராமர் சொன்னார்

நானே அவரிடம் அயோத்தி வேண்டாம் என்று கூறினேன். கோரக்பூர்தான் உங்களின் வலுவான தொகுதி. அங்கேயே போட்டியிடுங்கள் என்று கூறினேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் பல கடைகளை அரசு அகற்றி உள்ளது. நிலங்களை அரசு கைப்பற்றி உள்ளது. இதனால் மக்கள் கோபமாக உள்ளனர்.

Recommended Video

    UP Assembly Election 2022 & PMs Choice | Oneindia Tamil
    பேட்டி

    பேட்டி

    வீடுகளை, கடைகளை இழந்த மக்கள் அரசு மீது கோபமாக உள்ளனர். எனவே அங்கே போட்டியிடாதீர்கள் என்று கூறினேன். நான் இதை பற்றி கடவுள் ராமரிடம் கேட்டேன். ராமர் கடவுளிடம் கேட்ட பின்புதான் நான் யோகிக்கு இந்த அறிவுரையை வழங்கினேன் என்று அயோத்தியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடாதது குறித்து ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Uttar Pradesh Election 2022: Ram temple chief priest on Yogi Adityanath decision choose Gorakhpur instead of Ayodhya to contest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X