உபி.யில் பாஜக மாபெரும் வெற்றி.. மீண்டும் அரியணை ஏறும் யோகி ஆதித்யநாத்.. எதிர்க்கட்சியாகும் சமாஜ்வாதி
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கை பல்வேறு தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் உ .பியில் பாஜக 274 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. சமாஜ்வாதி 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 1 இடத்தில் , காங்கிரஸ் 2 இடங்களில் வென்றுள்ளது.
Recommended Video
இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரியணை இருக்கிறது. அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக அரியணை இருக்கிறார். சமாஜ்வாதி கட்சி அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் பலத்துடன் எதிர்க்கட்சியாக அமருகிறது. உத்தர பிரதேசத்தில் ஒரு மாத தேர்தல் திருவிழா முடிந்த நிலையில்.. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடைபெற்றது.
403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு மெஜாரிட்டி பெற 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் பாஜக 274 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

கடும் போட்டி
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் களம் கண்டன. தேர்தல் பிரச்சாரத்தின் போது சமாஜ் வாதி பாஜக இடையில் கடும் போட்டி நிலவியது. முக்கியமாக ஓபிசி வாக்குகள் அங்கு அதிக முக்கியத்துவம் பெற்றனர்.

கணிப்புகள்
பல்வேறு செய்தி நிறுவனங்கள், கருத்து கணிப்பு அமைப்புகள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் படி,
உ.பி எப்படி? - சராசரி இடங்கள்
மொத்தம் 403 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு தேவை 202
வெல்லும் வாய்ப்புள்ள கட்சி பாஜக
பாஜக வெல்லக் கூடிய இடங்கள் 234

மற்ற கட்சிகள் கணிப்பு
சமாஜ்வாதி 151 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் 14 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது.காங்கிரஸ் 9 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் கணிப்புகளை மிஞ்சி பாஜக இதுவரை 274 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

கடந்த தேர்தல்
1985-ம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக 2-வது முறையாக எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்தது இல்லை என்பதை முறியடித்து அங்கு பாஜக சரித்திரம் படைத்துள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. கடந்த முறையை விட கிட்டத்தட்ட 29 இடங்கள் பாஜக குறைவாக வென்றுள்ளது.

சமாஜ்வாதி
அங்கு பாஜக கூட்டணியில் இருந்த அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்களில் வென்றது. இந்த முறை சமாஜ்வாதி 124 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் பார்ட்டி 15 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications