உபியில் அகிலேஷ், யோகி மாபெரும் வெற்றி! துணை முதல்வர் மவுரியா தோல்வி! ஸ்டார் வேட்பாளர்கள் நிலை என்ன?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஸ்டார் வேட்பாளர்கள் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.
Recommended Video
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கடைசி கட்டமாக பல்வேறு இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் உ .பியில் பாஜக 274 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. சமாஜ்வாதி 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 1 இடத்தில் , காங்கிரஸ் 2 இடங்களில் வென்றுள்ளது.
இதன் மூலம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரியணை இருக்கிறது. அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக அரியணை இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தை தட்டி தூக்கும் பாஜக.. மீண்டும் அரியணை ஏறும் யோகி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்

யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். 66.18 சதவிகித வாக்குகள், அதாவது, 165499 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிட்டார். சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் எம்பியாக இருந்துள்ளார். சட்ட மேலவை மூலமாக எம்எல்ஏ ஆகி இருக்கிறார்.

முதல்முறை
ஆனால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். தற்போது முதல் சட்டசபை தேர்தலில் வென்றுள்ளார். அதேபோல் இன்னொரு முதல்வர் வேட்பாளரான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் இந்த முறை முதல் தடவை களமிறங்கி உள்ளார். முதல்முறையாக அகிலேஷ் யாதவ் சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அவர் கர்ஹால் தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.

அகிலேஷ் யாதவ் முன்னிலை
அங்கு அகிலேஷ் யாதவ் 60.12 சதவிகித வாக்குகள், அதாவது 148196 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். அதேபோல் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர் சிவ்பால் யாதவ் தனது தொகுதியில் வென்றுள்ளார். இவர் ஜஸ்வந்த் நகரில் இருந்து போட்டியிட்டார். உத்தர பிரதேசத்தின் ஸ்டார் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 62.97 சதவிகித வாக்குகள் அதாவது 159718 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.

கேசவ் பிரசாத் மவுரியா
உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் கேசவ் பிரசாத் மவுரியா தோல்வி அடைந்தார். இவர் உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரத்து தொகுதியில் போட்டியிட்டவர் இன்று காலை தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில் கடைசியில் 98941 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் பல்லவி பட்டேல் 106278 வாக்குகள் பெற்று வென்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications