சிறு, குறு தொழில்களை பாதுகாக்க சூப்பர் திட்டம்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நாட்டில் அதிக அளவு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இருக்கும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்றாகும். இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலமைச்சரின் குறுந்தொழில் முனைவோர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் யோகி அரசு அவ்வப்போது சில அதிரடி திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், MSME தொழில் நிறுவனங்களுக்கான முதலமைச்சரின் குறுந்தொழில் முனைவோர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 Yogi Adityanath Govt approves scheme to protect small, micro and medium enterprises

தேசிய அளவில் MSME தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் உ.பியும் ஒன்று. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் என்கிற அளவில் உயர்த்துவதை யோகி அரசு இலக்காக வைத்திருக்கும் நிலையில், அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த MSME தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்திற்கு இந்த திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும். தொழில் நிறுவனர் விபத்தில் உயிரிழந்துவிட்டால் அதற்காக ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். ஆனாலும் இதற்காக சில வரைமுறைகள் உண்டு. அதற்குள் பொருந்தும் தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும்.

தொழில் முனைவோர்கள், அவர்களுக்கென பதிவு செய்யப்பட்டுள்ள போர்ட்டலில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இந்த இழப்பீட்டிற்கு 18 வயது முதல் 60 வயது வரை யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதில், ஜிஎஸ்டி துறையால் நடத்தப்படும் வணிகர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற தகுதியில்லாத குறுந்தொழில் முனைவோர் சேர்க்கப்படுவர்.

இது குறித்து பேசிய நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, "இது ஓர் அற்புதமான திட்டமாகும். சிறு குறு தொழிலை நம்பியிருக்கும் குடும்பங்களை இந்த திட்டம் காப்பாற்றும்" என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+