மாஃபியாக்களின் நடவடிக்கையை உ.பி வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது தலைமையிலான பாஜக அரசு, மாஃபியாக்களை நரகத்திற்கு அனுப்பியுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட அவர், உத்தரப் பிரதேசத்தில் தனது தலைமையிலான பாஜக அரசு, கலவரக்காரர்களை நரகத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ராஜஸ்தானில் அப்படி எதும் நடக்கவில்லை என்றும், இங்கு இன்னும் கலவரக்காரர்களின் அட்டூழியங்கள் தொடர்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மேலும் அவர் பேசியதாவது, "நாட்டின் மற்ற மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருக்கையில், ராஜஸ்தான் மட்டும் பின்னோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இங்கு குற்ற சம்பவங்கள் சீரான வேகத்தில் வளர்ச்சியடைகிறது. ஆனால் வளர்ச்சியோ தலைகீழாக சென்றுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது நாட்டின் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நலன்கள் குறித்து கவலை கொள்ளவில்லை.
மாறாக முஸ்லீம்கள்தான் இந்த நாட்டின் முதல் தர குடிமக்களாக நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலத்தை பாருங்கள், பிரதமர் மோடி மற்றும் மாநில பாஜக அரசின் இரட்டை என்ஜின்களின் மூலமாக ஏராளமான நலத்திட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications