ரூ.35 ஆயிரம் கோடியில் 311 திட்டங்கள்.. வளர்ச்சி பாதையில் சீறும் உ.பி! யோகி ஆதித்யநாத் அசத்தல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்த ரூ.35,126.94 கோடியில் 311 திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த 311 திட்டங்களை இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாரௌத்தில் உள்ள ஜனதா வேதிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த 311 திட்டங்களில் 195 திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டிருக்கிறது. இதை தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு அவர் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல 116 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் பாக்பத் மாவட்டத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களையும் அவர் கூறியுள்ளார். அதாவது, "30 தொடக்கப் பள்ளிகளை சீரமைத்தல், குளம் புதுப்பித்தல், கிராமங்களை இணைக்க சாலை அமைத்தல், ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகளை பழுதுபார்த்தல், கர்ஹி கலஞ்சரி அருகே ஹிண்டன் ஆற்றின் மீது பாலம் கட்டுதல், அஹெடா ரயில் நிறுத்தத்தில் மேம்பாலம் அமைத்தல் ஆகியவை முக்கியமான திட்டங்களாகும். இதற்காக மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்திருக்கிறார். அந்த வகையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் பாஜக அரசின் முதல் நோக்கம்" என்று கூறியுள்ளார்.
இது தவிர பாவோலியில் கேந்திரிய வித்யாலயாவைத் திறந்து வைத்தார், பாக்பத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் அமிநகர் சராய்யில் அரசுக் கல்லூரி மற்றும் கெக்ராவில் அரசு ஆயுர்வேத மருந்தகம் கட்டவும் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் இப்பகுதியில் கல்வி அணுகல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications