அமிர்த் பாரத் நிலையத் திட்டம் உத்தரப் பிரதேசத்திற்கு ஓர் வரப்பிரசாதம்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: அமிர்த் பாரத் நிலையத் திட்டம் மூலம் உத்தரப் பிரதேசத்தில் 55 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்திருக்கிறார்.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் தினம் தினம் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில்தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்திருந்து. இதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்றும் பெயரிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.24,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் 55 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.4,355 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத் "இத்திட்டத்தின் மூலம், இந்த ரயில் நிலையங்கள் அதிநவீன சிறந்த பயணிகள் வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுடன் கூடியதாக இருக்கும். இதனுடன், இந்த ரயில் நிலையங்கள் உள்ளூர் கலை-கலாச்சாரத்திற்கு ஏற்ப 'நகர மையங்களாக' உருவாக்கப்படும். இது உத்தரப் பிரதேசத்திற்கு ஓர் வரப்பிரசாதம்" என்று கூறியுள்ளார். மேலும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications