பயமில்லையா? 2024ல் அமேதியில் தான் போட்டியா? ராகுலை நேராக கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி..ஏன்?
லக்னோ: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி ஆபாசமாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ‛‛நீங்கள் பயப்படமாட்டிங்களா?. 2024ல் மீண்டும் அமேதி தொகுதியில் தான் போட்டியிடுவீங்களா?'' என ராகுல் காந்தியிடம் நேராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டு சீண்டியுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
இதில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வென்ற நிலையில் அமேதியில் தோல்வியடைந்தார். அமேதி தொகுதியில் பாஜகவின் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி போட்டியிட்டு ராகுல் காந்தியை வீழ்த்தினார்.

உடைந்த காங்கிரஸ் கோட்டை
உத்தர பிரதேச மாநிலம் அமேதி நாடாளுமன்ற தொகுதி என்பது காலம் காலமாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. இந்நிலையில் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் இந்த தோல்வி என்பது அமேதி காங்கிரஸின் கோட்டை என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது அந்த தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல் பணியை துவக்கி உள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் பேட்டி
இந்நிலையில் தான் தான் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பிராந்திய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அமேதி தொகுதி தொடர்பாக பேசினார்.

ஸ்மிருதி இரானி பற்றி கருத்து
அப்போது அவர், ‛‛அமேதி தொகுதி என்பது காந்தியின் குடும்பத்துக்கானது. இந்த தொகுதியில் இருந்து ராகுல் காந்தி எம்பியாகி உள்ளார். அதற்கு முன்பு ராஜிவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி வெற்றி பெற்று சேவையாற்றி உள்ளனர். தற்போது அமேதி தொகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகள் மூடும் நிலையில் உள்ளது. ஜகதீஷ்பூர் தொழிற்பேட்டையில் பாதிக்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அமேதி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தற்போது ஸ்மிருதி இரானி உள்ளார். இவர் லட்காஸ், ஜட்காஸ் (நடனத்தை இழிவுப்படுத்த பயன்படுத்தப்படும் சொல்) செய்யவே தொகுதிக்கு வருகிறார்'' என கூறியுள்ளார்.

பாஜக கடும் எதிர்ப்பு
ஸ்மிருதி இரானியை விமர்சனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் பயன்படுத்திய சொல் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தர பிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், ‛‛பெண்களுக்கு எதிரான மோசமான வார்த்தைகளை காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தி வருகிறார். இது தான் அந்த கட்சியின் கலாசாரமாக உள்ளது. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மற்றும் கட்சியின்நீண்டகால தலைவராக பெண்ணை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி இப்படி கூறுவது அவமானத்துக்குரியது'' என்றார்.

ஸ்மிருதி இரானி கருத்து
இந்நிலையில் தான் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை சீண்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தியை ட்விட்டரில் டேக் செய்துள்ள ஸ்மிருதி இரானி, ‛‛2024ல் நீங்கள் அமேதியில் போட்டியிடுவீர்கள் என்று உங்கள் கட்சியின் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். இதற்கு அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியதை கேள்விப்பட்டேன். நீங்கள் அமேதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதா? வேறு தொகுதிக்கு ஓடமாட்டீரா? நீங்கள் பயப்பட மாட்டீர்களா?. நீங்களும், உங்கள் தாயும் மைசோஜினிஸ்ட்(பெண் வெறுப்பாளர்கள்) குண்டர்களை புதிய பேச்சாளர்களாக வைத்து கொள்ளுங்கள்'' என சாடியள்ளார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications