4 மணி நேர கேம்.. 2021 போலவே டி20 மேட்ச் ஆடிய டாக்டர்.. வாகாக சிக்கிய சம்பவம்.. தலைகீழ் மாற்றம்!
மதுரை : 2021ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்து 4 மணி நேரத்தில் எம்.எல்.ஏ சீட் வாங்கிய டாக்டர் சரவணனின் அரசியல், நேற்று 4 மணி நேரங்களில் நேர் எதிராகத் திரும்பியுள்ளது. நேற்று பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுரையில் நடந்த சம்பவங்களை 3 டி20 மேட்ச்களாகப் பிரிக்கலாம். அந்தளவுக்குப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்றது மதுரை அரசியல்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் நேற்று பகல் 12 மணிக்கு பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜகவினரின் கூட்டத்திற்குப் பின்னணியில் டாக்டர் சரவணன் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இரவோடு இரவாக நேரில் அமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கோரினார் சரவணன்.
பாஜகவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சரவணன் தெரிவித்தார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மாலையில் ஆக்ரோஷமாக பேட்டியளித்த சரவணன் அடுத்த 8 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை நேரெதிராக மாற்றிக்கொண்டது தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பிடிஆர் கார் மீது செருப்பு
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று பகல் 12 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பி.டி.ஆர் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டபோது, வாக்குவாதம் செய்த பாஜகவினர், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசினர்.

என்ன நடந்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்த வந்ததால், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாஜக தொண்டர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்தனர். அமைச்சர் பி.டி.ஆர், பாஜகவினர் திரண்டிருந்ததைப் பார்த்து, இவர்களுக்கு இங்கே என்ன வேலை? இங்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கட்சி சார்பில் பாஜகவினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது, பொதுமக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொள்ளட்டும் எனக் கூறியுள்ளார்.

செருப்பு வீச்சு
இதனால், பாஜகவினர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எந்த கட்சிக்காரர்களும் இங்கு இருக்கக்கூடாது என போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதால் கோபமடைந்த பாஜகவினர், அமைச்சர் பிடிஆர் காரில் ஏறிக் கிளம்பியதும் அவரது காரின் மீது செருப்பை வீசினர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

டாக்டர் சரவணன் விளக்கம்
மாலை 4 மணியளவில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்து "அமைச்சர் பி.டி.ஆர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி இருக்குனு இங்க வர்றீங்க எனக் கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது? ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு என்ன தகுதி உள்ளது? கட்சியை வைத்து வெற்றி பெற்றவர் பிடிஆர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம்." என சவால் விடுத்தார்.

பிண அரசியல்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி, செந்தில் பாலாஜி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இரவு 8 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் உடலை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

12 மணி
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நள்ளிரவில் சந்தித்து மதுரை பாஜக தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், பாஜகவில் மத அரசியல் நடக்கிறது. மன உளைச்சலுடன் தான் பாஜகவில் இருக்கிறேன். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் இரவில் அவரை சந்தித்து என்னுடைய வருத்தத்தை தெரிவித்தேன். பாஜகவில் தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் என்னுடைய ராஜினாமா செய்யப்போகிறேன். " எனத் தெரிவித்தார்.

ஒண்டே மேட்ச்
12 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், 4 மணியளவில் அமைச்சர் பிடிஆர் விமான நிலையத்தில் பேசியது குறித்து அவரைத் தாக்கி கடுமையாக பேட்டி தட்டினார் டாக்டர் சரவணன். அடுத்து 8 மணியளவில் அமைச்சரிடம் இந்தச் சம்பவம் குறித்து கேட்டதற்கு தியாகியை அடக்கம் செய்த இந்த நாளில் பிண அரசியல் செய்பவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை எனறதோடு முடித்துக்கொண்டார். அடுத்த 4 மணி நேரத்தில் ஆட்டமே மொத்தமாக மாறியது.

4 மணி நேர கேப்
12 மணியளவில், அமைச்சர் வீட்டுக்கே நேரில் சென்று பேசி, நடந்த சம்பவத்திற்கு வருத்தமும், தெரிவித்து, மீண்டும் திமுகவில் சேரப்போவதாக சமிக்ஞையும் கொடுத்துள்ளார் டாக்டர் சரவணன். 12 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு சரவணன் 4 மணியளவில் பேட்டி கொடுக்க, 8 மணிக்கு அமைச்சர் பிடிஆர் அட்டாக் செய்ய, அதன் பிறகான 4 மணி நேரத்தில் ஆட்டமே மொத்தமாக திரும்பி நள்ளிரவு 12 மணிக்கு திமுக அமைச்சர் வீட்டுக்கே வண்டியை விட்டார் சரவணன்.

அன்று 4 மணி நேரத்தில்
2019ல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சரவணன், 2021 தேர்தலில் திமுகவில் சீட் கொடுக்காததால், அன்றே பாஜகவிற்கு தாவி, கட்சி மாறிய வெறும் 4 மணி நேரத்தில் மதுரை வடக்கில் சீட் பெற்றார். ஆனாலும், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதேபோல, இன்றும் 4 மணி நேரங்களில் ஆட்டம் மாறி திமுக பக்கம் சாய்ந்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் சரவணன் எதிர்பார்த்த பதவி தரப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் தான் இந்தச் சம்பவம் திமுகவில் அவர் ஐக்கியமாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications