17 வயது சிறுமிக்கு தாலி கட்டி தனி வீட்டில் அலப்பறை.. மைக் செட்காரரை அள்ளிச் சென்ற மதுரை போலீஸ்
மதுரை: மதுரையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, 2வதாக திருமணம் செய்துள்ளார் 27 வயது வாலிபர். தற்போது அவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
மைக் செட் அமைக்கும் பணியின்போது சிறுமியை காதலித்து இவ்வாறு சட்ட விரோத திருமணம் செய்துள்ளார் வாலிபர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் இதுதான்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் மகாலிங்கம். இவர் அப்பகுதியில் திருவிழாக்களுக்கு ரேடியோ செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இரு வருட காதல்
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளைஞரின் பெற்றோர் மகாலிங்கத்திற்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

விவாகரத்து வழக்கு
அப்படியும் விடவில்லை, மகாலிங்கம். சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை போய்விட்டது. விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிறுமியை மதுரை மேல அனுப்பானடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெற்றோர் கடந்த மாதம் அனுப்பி வைத்துவிட்டனர்.

தாலி கட்டி தனி வீடு
இந்த நிலையில், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாகவும், தீவிரமாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மகாலிங்கம் சிறுமியை தெப்பக்குளம் பகுதிக்கு வரவைத்து சிறுமிக்கு தாலிகட்டியுள்ளார். தேவகோட்டை அருகே வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

மதுரை
இதையறிந்ததும், இளைஞரின் உறவினர்கள் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், தேவகோட்டை அருகே சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்து மதுரை அழைத்து வந்துள்ளனர்.

பாய்ந்த வழக்கு
தொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, உடலுறவு என்ற பெயரில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதால், இளைஞர் மகாலிங்கத்திற்கு எதிராக, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயது சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications